Padasalai Guides - Public Exam Question Bank

Padasalai Guides - Public Exam Question Bank
Padasalai Guides Previous Year Public Exams Questions Collection

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்கு விடுமுறை விடுங்கள் - மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மாணவர்கள் - சுவாரசியமாக பதிலளித்த ஆட்சியர்

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகன் (Anand Mohan IAS), பள்ளிக்கு விடுமுறை கோரி இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பிய மாணவர்களுக்கு "மழை வந்தா நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க!" என்று நகைச்சுவையாகவும் அன்பாகவும் பதிலளித்துள்ளார்.
 
கனமழையின் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாணவர்கள் அனுப்பியுள்ள இன்ஸ்டாகிராமில் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது வைரலாகி உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், நேற்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த நிலையில் இன்று (அக்டோபர் 26) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என மாணவர்கள் பலரும் மாவட்ட ஆட்சியர் ஆனந்த் மோகனின் சமூக வலைதளங்களில் இரவு நேரத்தில் அடுத்தடுத்து குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளனர்.


இந்நிலையில், மாணவர்கள் அனுப்பிய சுவாரசியமான குறுஞ்செய்திகளைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘ரெயின் பரிதாபங்கள்’ எனக் குறிப்பிட்டு மாவட்ட ஆட்சியர் பகிர்ந்துள்ளார். அதில் மாணவர் ஒருவர், “மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைக் கருத்தில் கொண்டு எங்களுக்கு சாதகமான முடிவை எடுக்க வேண்டும்” எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மற்றொரு மாணவரோ, “மழைநீர் எங்கள் வீட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் தேங்கியுள்ளது. பள்ளிக்கு விடுமுறை விடாவிட்டால் எங்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்று அர்த்தம்” என உரிமையுடன் கூறியுள்ளார்.



இன்னொரு மாணவர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்காத மாவட்ட ஆட்சியரை கண்டிக்கும் வகையில் ஒருபடி மேலே சென்று, “நீங்கள் ஒரு மனிதனாகத் தோல்வி அடைந்துவிட்டீர்கள், ஓர் ஐஏஎஸ் அதிகாரியாகத் தோல்வி அடைந்துவிட்டீர்கள், ஒரு மாவட்ட ஆட்சியராகவும் தோல்வி அடைந்துவிட்டீர்கள்.
 


எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவுக்குத் தாமதமாக வந்தபோது எங்கள் நிர்வாகம் உங்களை மன்னித்துவிட்டது. ஆனால், நாங்கள் உங்களை மன்னிக்கவில்லை. தாமதமாக வந்ததற்கு மன்னிப்பு வேண்டுமென்றால் நாளை விடுமுறை விடுங்கள்” என ஆட்சியரிடமே செல்லமாகச் சண்டையிட்டுள்ளார்.
 
மற்றொரு மாணவர், “அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்ல, சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் விடுமுறை விடுங்கள். மன அழுத்தமாக இருக்கிறது; ஒருநாள் விடுமுறை தந்து உதவுங்கள்” எனக் கண்ணீர் சிந்தும் எமோஜிகளுடன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதில் ஹைலைட்டாக, "எங்கள் நண்பர்களின் வீடுகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கி நீச்சல் குளம்போல் காட்சியளிக்கிறது. வெளியே கடும் குளிராக உள்ளது. காரை ஓட்டும்போது கண்ணாடியில் பனிமூட்டம் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்பட்டால் பிறந்தநாள் என்பது இறந்த நாளாக மாறிவிடும். எனவே, நாளை பள்ளிக்கு விடுமுறை விடுங்கள்” என ஒரு மாணவர் பதிவிட்டுள்ளார்.

மற்றொரு மாணவர், “கடந்த முறை விடுமுறை அறிவித்து எங்களைக் காப்பாற்றியதுபோல் இந்த முறையும் விடுமுறை அறிவிக்க வேண்டும்” என மன்றாடியுள்ளார்.

மாணவர்களின் இந்தக் குறுஞ்செய்திகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த மாவட்ட ஆட்சியர், “ஆனா இங்க சில பேரு ‘லீவு விடலனா கலெக்டராவே ஃபெயில்’, ‘பர்த்டேவே டெத் டே’, ‘ரொம்ப டிப்ரஷனா இருக்கு’னு இன்ஸ்டாகிராம்ல ஆஸ்கார் லெவலுக்கு எமோஷனல் பிளாக்மெயில் பண்ணிட்டு இருக்கானுவ. உங்க கஷ்டம்லாம் புரியுது, ஆனா இந்த ஓவர் ஆக்டிங் தான்டா தாங்க முடியல!




கவலைப்படாதீங்க, நிஜமாவே கனமழை பெஞ்சா, நீங்க யாருமே கேக்காமலேயே லீவு வரும். உங்க சேஃப்டிக்கு இந்த கலெக்டர் அங்கிள் எப்பவும் கேரண்டி! மழை வந்தா நான் பாத்துக்கிறேன், இப்போதைக்கு புக்கப் பாத்து படிங்க!" என்று பதிவிட்டுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive