
மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்காக ஆண்டு தோறும் என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இதன் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
அவர்களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.
அதன்படி, நடப்பு கல்வி ஆண்டுக்கான தேர்வு டிச.12-ம் தேதி நடத்தப்படும். இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது.
விருப்பம் உள்ள மாணவ, மாணவிகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
அதை பூர்த்தி செய்து, ரூ.50 தேர்வுக் கட்டணத்தைச் சேர்த்து, தாங்கள் படிக்கும் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் நவ.3-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...