புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட SMC உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் தொடர்பாக மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
Energizing SMC Members - SPD Proceedings
SMC 2026 : தமிழ்நாட்டில் 6,654 அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வலுப்படுத்தல்! மாநிலத் திட்ட இயக்குநர் உத்தரவு
✅ இரண்டு கட்டங்களாக 6,654 பள்ளிகள் தேர்வு
📝 முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான 6 முக்கிய கட்டளைகள்
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சென்னை-600 006
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண். 1338/A11/பமேகு/ஒபக/2026 , நாள்: 15/10/2026
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி பள்ளி மேலாண்மைக் குழு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு தொடக்க நிலை / நடுநிலை / உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களை ஆற்றல்படுத்துதல் - பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களின் செயல்பாடுகள் வழிகாட்டுதல்கள் வழங்குதல்-சார்பு
பார்வை
(1) அரசாணை (நிலை) எண். 143, பள்ளிக் கல்வித் (அகஇ2) துறை நாள். 19.08.2026.
(2) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள். நகஎண். 1077/A11/பமேரு/ஒப்சு/2025, நாள் 15.04.2025.
(3) ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககச் செயல்முறைகள், நகஎண்: 1338/A11/பமேரு/ஒபக/2026, நாள் 02.06.2026.
பார்வை-1-இன்படி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 2026-2028 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. பள்ளியின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கிடவும். குழுக் கூட்டங்களில் சிறப்பாகப் பங்கேற்கவும் ஊக்கப்படுத்துதல் அவசியமாகிறது.
பார்வை-2-இன்படி, முதல் கட்டமாகத் தெரிவுசெய்யப்பட்ட 3,744 பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு செயல்பாடுகளை வலுப்படுத்தும் விதமாக, உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள் (SMC-RPs) வழியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, பார்வை-3-இல் உள்ளவாறு, இரண்டாம் கட்டமாக முதல் கட்டப் பள்ளிகளுக்கு அருகமையில் உள்ள 2,960 பள்ளிகள் தேர்வுசெய்யப்பட்டு மொத்தம் 6,654 பள்ளிகளில் 2026-2027ஆம் கல்வியாண்டில் கருத்தாளர்கள் தங்களுக்கு அனுமதிக்கப்ட்ட பணிகளை மேற்கொள்வதற்கு.
வழிகாட்டுதல்களில் உள்ளவாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல் (இணைப்பு-1)இறுதி செய்யப்பட்டு பின்னர் அனுப்பப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, 2026-2027 ஆம் கல்வியாண்டில் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களால் கவனம் செலுத்தப்படவுள்ள பள்ளிகளின் பட்டியல், முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டம் இரு பகுதிகளாக, இணைப்பு-1 ஆக இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பள்ளிகளின் எண்ணிக்கை விவரம் பின்வருமாறு
வ .எண் / கட்டம் / பள்ளிகளின் எண்ணிக்கை
1. முதல் கட்டம் (இணைப்பு-1 பகுதி-அ). : 3,743
2. இரண்டாம் கட்டம் (இணைப்பு-1 பகுதி.ஆ) : 2,911
மொத்தம் : 6,654
இணைப்பு-1-இல் உள்ள பள்ளிகளில் பார்வை-3-இல் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கருத்தாளர்கள் பணிபுரிவார்கள். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கீழ்க்காணும் அறிவுறுத்தல்களைத் தங்கள் மாவட்டத்தில் உறுதிசெய்திடக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1) தங்கள் மாவட்டத்தில் உள்ள இணைப்பு-1 இல் குறிப்பிடப்பட்டுள்ள முதல் மற்றும் இரண்டாம் கட்டப் பள்ளிகள் பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களால் சிறப்புக் கவனம் செலுத்தப்படவுள்ள பள்ளிகள் என்பதை உதவித் திட்ட அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் (SMC-DCs) மற்றும் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
2) இப்பள்ளிகளுக்குக் அனுமதிக்கப்பட்ட கருத்தாளர்கள் வருகை தரும்போது, பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி, பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டங்கள் மற்றும் கிராம சபைக் கூட்டங்களைப் பார்வையிடுதல் பெற்றோர் செயலி பயன்படுத்துதல் தொடர்பான விழிப்புணர்வு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளத் தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பைத் தலைமையாசிரியர்கள் வழங்கிட வேண்டும்.
3) பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி மற்றும் கூட்டங்கள் குறித்த தகவல்கள் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு முன்கூட்டியே சென்றடைவதையும், உறுப்பினர்கள் பங்கேற்பதையும் உறுதிசெய்யும் பணிகளை மேற்கொள்ளத்
தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பைத் தலைமையாசிரியர்கள் வழங்கிட வேண்டும்
4) கருத்தாளர்கள், தங்களுக்கு இணைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் மட்டுமே பணிபுரிவார்கள். மாநிலத் திட்ட அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ள பணிகளைத் தவிர வேறு எந்தவொரு பணிகளிலும் கருத்தாளர்களை முன் அனுமதியின்றி ஈடுபடுத்தக் கூடாது.
5) பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பள்ளிகளின் பட்டியலைச் சார்ந்த வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் (BRTEs), மேற்பார்வையாளர்களுடன் (Supervisors) பகிர்ந்து. கருத்தாளர்களுக்குத் தேவையான அனுமதி மற்றும் ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
6) இணைப்பு-1 இல் உள்ள பட்டியலில் ஏதேனும் திருத்தம் அல்லது விடுபாடு இருப்பின் அதனை மாநிலத் திட்ட அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும்.
எனவே 2026-2027ஆம் கல்வியாண்டிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வட்டார அளவில் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள பள்ளி மேலாண்மைக்குழு கருத்தாளர்கள். பணிகளை மேற்கொள்ளுவதற்குத் தேவையான அனுமதியும் மற்றும் ஒத்துழைப்பும் வழங்கிட உதவித் திட்ட அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு-1: தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பெயர் பட்டியல் (மின்னஞ்சல் வாயிலாக) 2:மாநில முதன்மைக் கருத்தாளர்கள் (Trainers) பெயர் பட்டியல் 3: பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்களின் பெயர் பட்டியல்
மாநிலத் திட்ட இயக்குநர்
பெறுநர் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
நகல்: (தகவலுக்காக அனுப்பலாகிறது)
1. இயக்குநர், பள்ளிக் கல்வி இயக்ககம், சென்னை
2. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை-6.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...