மதுரையில் சிறப்பு ‘டெட்’ தேர்ச்சி பெற்ற விபரத்தை உடன் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் (எஸ்.ஆர்.,) உடன் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தென்கரை முத்துப்பிள்ளை உத்தரவிட்டார்.
மேலுார் கல்வி ஒன்றியத்திற்கு உட்பட்ட 110 தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆய்வுக் கூட்டம் பி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்தது. வட்டாரக் கல்வி அலுவலர்கள் ரூபி, கோவிந்தம்மாள் முன்னிலை வகித்தனர். தென்கரை முத்துப்பிள்ளை பேசியதாவது: மழைக்காலம் துவங்கியுள்ளதால் பள்ளி வளாகம், மாணவர் பாதுகாப்பை தலைமையாசிரியர் உறுதி செய்ய வேண்டும். ஆபத்து கட்டடங்கள் இருப்பின் அவற்றை உரிய முறையில் இடித்து அகற்ற வேண்டும். மாணவர் சார்ந்து எந்த பிரச்னையாக இருந்தாலும் உடன் டி.இ.ஓ.,க்கள் கவனத்திற்கு கொண்டுவர வேண்டும்.
மாவட்டத்தில் 7 ஆயிரத்திற்கு மேல் தாள் 1ம், 9 ஆயிரத்திற்கு மேல் தாள் 2ம் என சிறப்பு 'டெட்' தேர்வை ஆசிரியர் எழுதியுள்ளனர். தேர்ச்சி பெற்றோர் அதற்கான சான்றை பதிவிறக்கம் செய்து, உடன் எஸ்.ஆர்.,ல் பதிவு செய்ய பி.இ.ஓ.,க்கள் அறிவுறுத்த வேண்டும் என்றார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...