Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளி மாணவர் உயர் கல்வி சேர்க்கை: திருச்சி முதலிடம்; திருவாரூர் கடைசி

hindutamil-prod%2F2026-10-08%2Fzsjoypi6%2F1541121

 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத மொத்தம் 8,27,475 மாணவர்கள் பதிவு செய்தனர். இதில் 7,91,654 பேர் தேர்வை எழுதினர். 7,53,694 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி விகிதம் 95.20%. அரசு பள்ளி தேர்ச்சி விகிதம் 92.16% ஆகும். திருச்சி மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு பள்ளியில் பிளஸ் 2 பயின்று தேர்வெழுதிய மாணவர்களில் 98 சதவீதம் பேர் உயர் கல்வி பயின்று வருகின்றனர். இதனால், உயர்கல்வி சேர்க்கையில் தமிழக அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 108 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 10,875 மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதினர். இதில், 10,552 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 323 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அரசு பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி அடைந்த 10,552 மாணவர்களில் 10,357 பேர் (செப். 25-ம் தேதி வரை) கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 

மேலும், தேர்ச்சி பெறாத 353 மாணவர்களில் 256 மாணவர்கள் பாலிடெக்னிக், ஐடிஐ போன்ற கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்றுள்ளனர். அதன்படி, திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 10,613 மாணவர்கள், அதாவது 98 சதவீதம் பேர் உயர்கல்வி சேர்க்கை பெற்றுள்ளனர். அந்த வகையில் பிளஸ் 2 படித்த அரசுப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கையில் மாநில அளவில் திருச்சி மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது.

பெரம்பலூர், திருப்பத்தூர் காஞ்சிபுரம் மாவட்டங்கள் 97 சதவீதத்துடன் மாநில அளவில் 2, 3, 4-ம் இடம் பிடித்துள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் 3,491 மாணவர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 5,621 மாணவர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 7,234 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்றுள்ளனர். கோவை மாவட்டம் 94 சதவீதத்துடன் (10,429 மாணவர்கள்) 5-ம் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் திருவாரூர் மாவட்டம் 83 சதவீதத்துடன் (4,955 மாணவர்கள்) கடைசி இடத்தில் உள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் உயர்கல்வி வழிகாட்டி அதிகாரிகள் கூறும்போது,' பாராமெடிக்கல் பிரிவில் மாணவர்கள் சேர்க்கை மூன்றாம் கட்டமாக தற்போது நடைபெற்று வருகிறது. இதனால், உயர்கல்வியில் சேரும் மாணவர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும்' என்றனர்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive