![]() |
| புலவர் புலமைபித்தன் |
இயல் : அரசியல்
அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்
குறள் எண்:504
குறள்:
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
பொருள்:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
Silence gives consent.
மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி.
இரண்டொழுக்க பண்புகள் :.
1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன்.
2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
பிறரின் நலனில் அக்கறை கொள்பவன் உண்மையான செல்வந்தன்.
Thought for the Day :
🕯️ Helping others shine won’t dim your own glow…
பொது அறிவு :
1.2026 -ல் 100 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய அமைப்பு எது?
UPSC- ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம்.
2. UPSC நிறுவப்பட்ட ஆண்டு எது?
1926.
English words :
1. Hazy – not clear in outline or memory – மங்கலான
2. Indistinct – not easily seen or heard – தெளிவில்லாத
புவியியலும் சுற்றுசூழலும் :
தமிழ்நாட்டிற்கு முக்கியமான மழைக்காலம்:
தென்மேற்கு பருவமழை – ஜூன் முதல் செப்டம்பர்
வடகிழக்குப் பருவமழை – அக்டோபர் முதல் டிசம்பர்
⭐ தமிழ்நாட்டிற்கு அதிக மழையைத் தருவது – வடகிழக்குப் பருவமழை.
NMMS :
MAT
"PAINTER" எஎன்ற சொல்லில் உள்ள எழுத்துகளை ஆங்கில அகர வரிசைப்படி வரிசைப்படுத்தி எழுதினால் தனது இடத்தை மாற்றிக் கொள்ளாத எழுத்துகளின் எண்ணிக்கை எத்தனை??
(1) 1.
(2) 2.
(3) 3.
(4) 4.
விடை: (2) 2
அக்டோபர் 06
நீதிக்கதை
வயது வருமுன் வாகனம் ஓட்டியதால் வந்த ஆபத்து
ஒரு அழகான கிராமத்தில் கார்த்திக் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் பத்தாம் வகுப்பு படித்து வந்தான். அவனுக்கு இருசக்கர வாகனம் ஓட்டுவதில் மிகவும் ஆர்வம் இருந்தது.
ஒருநாள் அவனுடைய நண்பர்கள் சிலர், “நாங்கள் எல்லோரும் வாகனம் ஓட்டக் கற்றுக்கொண்டோம். நீயும் ஓட்டிப் பார்!” என்று கூறினர். அவர்களின் பேச்சைக் கேட்ட கார்த்திக், தனக்கு உரிய வயது வரவில்லை என்பதையும், வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் பெறவில்லை என்பதை யும் மறந்துவிட்டான். வீட்டில் யாருக்கும் தெரியாமல் தன் தந்தையின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு சாலையில் ஓட்டத் தொடங்கினான். சாலையில் வாகனங்கள் அதிகமாகச் சென்று கொண்டிருந்தன.
கார்த்திக்கிற்கு போக்குவரத்து விதிகள் பற்றிய போதிய அனுபவம் இல்லாததால், வாகனத்தைக் கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக, அருகில் இருந்த ஒருவர் அவனை எச்சரித்து வாகனத்தை நிறுத்த உதவினார். பெரிய ஆபத்து ஏற்படுவதற்கு முன்பே அவன் தப்பித்தான். வீட்டிற்குத் திரும்பிய கார்த்திக் நடந்தவற்றைத் தன் தந்தையிடம் கூறினான்.
தந்தை அவனை அன்புடன் அழைத்து, “மகனே , வாகனம் ஓட்டுவது விளையாட்டு அல்ல. அதற்குத் தேவையான வயதும், சட்டப்படி ஓட்டுநர் உரிமமும், போதிய பயிற்சியும் அவசியம். நண்பர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக ஆபத்தான செயல்களில் ஈடுபடக் கூடாது” என்று அறிவுரை கூறினார்.
கார்த்திக்கும் தன் தவறை உணர்ந்தான். உரிய வயது வரும் வரை வாகனம் ஓட்டாமல் இருக்கவும், போக்குவரத்து விதிகளைப் படித்துத் தெரிந்துகொள்ளவும் உறுதி எடுத்துக்கொண்டான்.
அதன்பிறகு அவன் தனது நண்பர்களுக்கும் வயதுக்கு முன்பே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துக்கூறினான்.
### நீதி:
உரிய வயது வருவதற்கு முன் வாகனம் ஓட்டக் கூடாது. சட்டத்தை மதித்து, பாதுகாப்பிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...