Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார் - பலன்கள் என்னென்ன?

 




தொலைதூர பேருந்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லாமல் செல்லும் வகையில் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் இன்று (அக்.2) சென்னையில் தொடங்கி வைத்தார்.

சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பில் ‘தமிழகத்தில் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒவ்வொரு மகளிரும் போக்குவரத்துக் கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக் கூடாது என்ற சமூக நீதிச் சிந்தனையை தவெக அரசு முதன்மையாகக் கொண்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில், காந்தியடிகள் பிறந்த நாளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது’ என கூறியிருந்தார்.
இந்நிலையில், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விரிவாக்கம் செய்யப்பட்ட மகளிர் கட்டணமில்லா வெற்றிப் பயணம் திட்டத்தை முதல்வர் விஜய், இன்று காலை 10 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இதற்காக பேருந்தில் இருந்து மகளிருக்கு பேருந்து பயணத்துக்கான டிக்கெட்டுகளை அவரே வழங்கினார். அப்போது அவரிடம் பேருந்தில் இருந்த மகளிர் நலம் விசாரித்தனர். அவருக்கு முன்னதாக, இந்நிகழ்வின் தொடக்கத்தில் போக்குவரத்து துறை அமைச்சரை விஜய் தமிழன் பார்த்திபன், வெற்றிப் பயணம் திட்டத்தின் பலன்கள் குறித்து பேசினார்.

திட்டத்தின் நடைமுறை என்ன?

இந்தத் திட்டத்தின் மூலம் மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமின்றி மாநகரம், நகர்ப்பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம். மேலும் கூடுதலாக, மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதிகளில், சாதாரணக் கட்டணப் பேருந்துகளிலும் இத்திட்டம் பொருந்தும்.


7 போக்குவரத்து கழகங்கள் மூலமாக இயக்கப்பட உள்ள 12,695 பேருந்துகளில், 1,68,500 தினசரி நடைகளில் தினமும் 84.32 லட்சம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் பயன் பெறுவார்கள் என போக்குவரத்து துறை கூறியுள்ளது.
மாநகரம் / நகர்ப்புறங்களில் சாதாரண, எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலகஸ் சேவைகள், புறநகர்களில் சாதாரண சேவைகள், மலைப்பகுதிகளில் சாதாரண சேவைகளை உள்ளடக்கியது இந்தத் திட்டம். இடைத்தேர்தல் காரணமாக, செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் நீங்கலாக விரிவாக்கப்படும் பேருந்து சேவைகள் திட்டம் இப்போது தொடங்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive