Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.10.2026

 

நீல்ஸ்போர்






திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:51.தெரிந்து தெளிதல்


குறள் எண்:505

குறள்:

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல்.

பொருள்:

ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.

பழமொழி :

Single tree makes no forest

தனி மரம் தோப்பாகாது.

இரண்டொழுக்க பண்புகள் :.

 1.பெற்றோர் எனக்கு நன்மை நடப்பதையே விரும்புவர். எனவே அவர்களின் சொல் கேட்டு நடப்பேன். 

 2.பெரியவர்கள் தமது அனுபவத்தையே அறிவுரையாக தருவார்கள் என்வே பெரியோர்களின் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

மாற்றம்: "நாம் உலகில் காண விரும்பும் மாற்றம், முதலில் நம்மிடமே நிகழ வேண்டும்!"

Thought for the Day :

Change: "Be the change that you wish to see in the world!"

பொது அறிவு : 

1. 2026-ல் தமிழ்நாட்டில் முதல் Booth -less toll plaza எங்கு அமைக்கப்பட்டது? 

பரனூர் சுங்கச்சாவடி, செங்கல்பட்டு. 

2. பரனூர் சுங்கச்சாவடியில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் எது? 

MLFF (MULTI LANE FREE FLOW).சுங்கச்சாவடியில் வாகனம் நிற்க வேண்டியதில்லை சென்சார் மூலம் FASTAG கணக்கிடப்படும்.

English words :

1. Indistinct – not easily seen or heard – தெளிவில்லாத.

2. Equivocal – open to more than one meaning – இருபொருள்படும்.

புவியியலும் சுற்றுசூழலும் :

வருவாய் ஆதாரங்கள்
பேரூராட்சிக்கு வருவாய் கிடைக்கும் சில வழிகள்:
*சொத்து வரி
*குடிநீர் கட்டணம்
* தொழில்/வணிகம் தொடர்பான வரிகள் மற்றும் கட்டணங்கள்
*கட்டிட அனுமதி மற்றும் பிற சேவைக் கட்டணங்கள்
*அரசு வழங்கும் நிதி மற்றும் மானியங்கள் ஆகியவை ஆகும்

NMMS :

MAT 

ஒரு வரிசையில் ரவி இடமிருந்து 12-வது இடத்திலும், வலமிருந்து 18-வது இடத்திலும் இருக்கிறார். அந்த வரிசையில் மொத்தம் எத்தனை பேர் உள்ளனர்?

A) 28

B) 29

C) 30

D) 31

💡 குறிப்பு: ரவியை இருமுறை எண்ணியிருக்கிறோமா என்று கவனியுங்கள்.

 விடை — 29!

அக்டோபர் 07

நீல்ஸ்போர் அவர்களின் பிறந்தநாள்

நீல்ஸ் என்றிக் டேவிட் போர் ( அக்டோபர் 7, 1885 - நவம்பர் 18, 1962) இயற்பியல் துறையில், குறிப்பாக அணுவியலில், அடிப்படை கருத்தாக்கங்கள் தந்த புகழ்மிக்க டென்மார்க் அறிவியலாளர். அணுவில் எலக்ட்ரான்களின் இயக்கங்களை, அதன் தன்மைகளைக் கண்டறிந்து அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தவர். இவர் இயற்பியலுக்காக 1922 இல் நோபல் பரிசு பெற்றார். 20 ஆம் நூற்றாண்டின் புகழ்மிக்க பல இயற்பியல் அறிஞர்களுக்கு வழிகாட்டியாகவும் மற்றும் பல அறிஞர்களோடு தான் வாழ்ந்த டென்மார்க்கின் கோப்பனாஃகனில் அறிவியல் கூட்டாய்வாளராக இருந்தார். ஐன்ஸ்டைனுடன் இவர் நிகழ்த்திய குவாண்ட்டம் கருத்தியம் பற்றிய கருத்துப்போர் புகழ்பெற்றது. 20 ஆம் நூற்றாண்டில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய மாபெரும் அறிவியலாளர்களில் ஒருவராக இவர் அறியப்படுகின்றார்.

நீதிக்கதை

ஒற்றுமையின் பலம் 🐰🦀🦅

ஒரு அடர்ந்த காட்டில் ஒரு முயல் தன் குட்டியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தது. முயல் குட்டி மிகவும் துள்ளலும் விளையாட்டும் நிறைந்தது.

ஒருநாள் முயல் குட்டி காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, வண்ணத்துப்பூச்சி ஒன்றைப் பின்தொடர்ந்து வெகுதூரம் சென்றுவிட்டது. திரும்பி வரும்போது, அது சென்ற பாதையை மறந்து வழி தவறிவிட்டது.

“அம்மா... அம்மா...” என்று அழுதுகொண்டே முயல் குட்டி தன் தாயைத் தேடியது. ஆனால் தாய் முயல் எங்கும் இல்லை.

அதே நேரத்தில், தாய் முயலும் தன் குட்டியைக் காணாமல் கவலையடைந்தது.

“என் குட்டி எங்கே சென்றிருக்கும்?” என்று காட்டின் பல பகுதிகளிலும் தேடத் தொடங்கியது.

இதற்கிடையில், ஒரு பெரிய கழுகு வானத்தில் பறந்து கொண்டிருந்தது. கீழே தனியாக இருந்த முயல் குட்டியைப் பார்த்ததும், அதை இரையாகப் பிடிக்க வேண்டும் என்று நினைத்தது.

கழுகு மெதுவாக கீழே பறந்து வந்து முயல் குட்டியைப் பிடிக்கத் தயாரானது.

முயல் குட்டி பயந்து ஓடத் தொடங்கியது. ஆனால் கழுகு அதை விடாமல் துரத்தியது.

அப்போது அருகிலிருந்த ஆற்றங்கரையில் வாழ்ந்த நண்டு அரசன் இதைக் கவனித்தது.

“நண்பர்களே! அந்த முயல் குட்டி ஆபத்தில் உள்ளது. நாம் அனைவரும் சேர்ந்து அதைக் காப்பாற்ற வேண்டும்!” என்று நண்டு அரசன் தனது கூட்டத்திடம் கூறியது.

உடனே நூற்றுக்கணக்கான நண்டுகள் ஒன்றாகச் சேர்ந்தன.

சில நண்டுகள் ஆற்றங்கரையில் வரிசையாக நின்றன. சில நண்டுகள் புதர்களுக்குள் சென்று முயல் குட்டி மறைந்து கொள்ள இடம் ஏற்படுத்தின. மற்ற நண்டுகள் தங்கள் பெரிய கொடுக்குகளை உயர்த்திக் கொண்டு கழுகை நோக்கி நகர்ந்தன.

கழுகு கீழே இறங்கியபோது, ஏராளமான நண்டுகள் ஒன்றாக இருப்பதைக் கண்டு திகைத்தது.

“இவ்வளவு நண்டுகள் ஒன்றாக இருக்கிறதே! இங்கே இறங்குவது ஆபத்தானது,” என்று நினைத்த கழுகு அங்கிருந்து பறந்து சென்றது.

முயல் குட்டி பாதுகாப்பாக இருந்தது.

சிறிது நேரத்தில் தாய் முயல் அங்கு வந்து தன் குட்டியைக் கண்டது.

“என் குட்டியே!” என்று மகிழ்ச்சியுடன் அதை அணைத்துக் கொண்டது.

பின்னர் தாய் முயல் நண்டு அரசனையும் அதன் கூட்டத்தையும் பார்த்து,

“நீங்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து என் குட்டியைக் காப்பாற்றியிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்?” என்று கண்ணீர் மல்கக் கூறியது.

நண்டு அரசன் புன்னகையுடன்,

“நாம் அனைவரும் ஒன்றாக இருந்தால், எவ்வளவு பெரிய ஆபத்தையும் எதிர்கொள்ள முடியும். அதுதான் ஒற்றுமையின் பலம்!” என்றது.

அன்று முதல் காட்டில் வாழ்ந்த விலங்குகள் அனைத்தும் ஒருவருக்கொருவர் உதவி செய்து, ஒற்றுமையுடன் வாழத் தொடங்கின.

🌿 நீதிக்கருத்து:

“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு; ஒற்றுமையே நம் பலம்.”

“தனியாக நாம் சிறியவர்களாக இருக்கலாம்; ஒன்றாக இருந்தால் பெரிய சவால்களையும் வெல்லலாம்.” 

இன்றைய செய்திகள்

07.10.2026

🗒️ஒரே நேரத்தில் 900 பேர் பயணிக்கலாம்; பூந்தமல்லி - வடபழனி இடையே முதற்கட்டமாக 15 மெட்ரோ ரெயில்கள் இயக்கம்.

🗒️தேன்கனிக்கோட்டை அருகே 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு
இந்த பாறை ஓவிய தொகுப்புகள், இரும்புக்கால மனிதனின் வழிபாட்டு மரபுகளின் பின்காலத்தை எடுத்துக்கூறுகிறது.

🗒️மத்திய நிதி மந்திரி தலைமையில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
வரிப்பகிர்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

🗒️இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்செனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டுச் செய்திகள்

🏀 தேசிய சைக்கிளிங் போட்டி: தமிழக அணி ‘சாம்பியன்’
ஜூனியர் பிரிவில் தலா 2 தங்கம் வென்று அசத்தினர்.

Today's Headlines

🗒️ 900 people can travel at the same time. 15 Metro trains will be operated in the first phase between Poonamallee and Vadapalani.

🗒️ 3,000-year-old rock paintings have been discovered near Denkanikottai.
These rock paintings give information about the later period of the worship practices of Iron Age people.

🗒️ GST Council meeting will be held tomorrow under the leadership of the Union Finance Minister.
The meeting will discuss various issues, including tax sharing.

🗒️ The Nobel Prize in Physics has been announced for Belgian scientist Francis Halse.

🏀 Sports News

🏀 National Cycling Championship: Tamil Nadu team becomes champion.
In the junior category, the players performed very well by winning two gold medals each.

Covai women ICT_போதிமரம்









0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive