பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம்:
எமது இயக்கத்தின் 18 ஆண்டுக்கால போராட்டம் நிறைவடைகிறது!
எல்லா தரப்பு வாதங்களும் நிறைவடைந்துவிட்டன. ஆன்லைனில் அனைவரும் பார்த்திருப்பீர்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் சார்பாக எடுத்து வைக்க வேண்டிய அனைத்து வாதங்களும் நம்முடைய மூத்த வழக்கறிஞர்கள் மூலம் உச்ச நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுவிட்டன.
மூத்த வழக்கறிஞர்கள்:
1.திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா
2.திரு.எஸ்.எஸ்.சுந்தர்
3.திரு.அஜ்மல்கான்
ஆகியோர் பட்டதாரி ஆசிரியர்களின் சார்பாக வழக்காடிய மூத்த வழக்கறிஞர்கள்.
அரசு தரப்பு வாதத்தின் மூலமாக இறுதி நாள் விசாரணை தொடங்கியது.
அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது.
1.உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதியானவர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே!
2.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு விதிகளின்படி உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க முடியாது!
3.தற்போதுள்ள சுமார் 1200க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத்துக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்கப்படும்.
4.சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அரசு தரப்பு ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்த தயாராக உள்ளது.
5.முதுகலை ஆசிரியர் பணியில் இருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களாகப் பணி மாறுதலில் 2018,2019 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் சென்ற 1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகவே திருப்பி அனுப்ப வேண்டும் என்பதிலிருந்து மட்டும் விலக்களிக்குமாறு கோரிக்கை வைக்கப்படுகிறது.
6.1212 பேரை மீளவும் முதுகலை ஆசிரியர்களாகத் திருப்பி அனுப்புவதால் அரசு தரப்புக்கு ஏராளமான நிர்வாகச் சிக்கல் ஏற்படுவதாலும், மாணவர்களின் நலன் கருதியும், தகுதித் தேர்வு பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டும் Reversion ஐ மட்டும் கைவிட அனுமதிக்குமாறு அரசு தரப்பு கோரியுள்ளது.
7.பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களாவர்.எனவே அவர்களுக்கான அடுத்த பதவி உயர்வு அப்பணித் தொகுதியில் இருக்கும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணி மட்டுமே.
8.confirmation order அதாவது தகுதிகாண் பருவம் முடித்த பின்பு பணி நிரந்தரம் செய்யப்பட்ட ஆணை வழங்க வேண்டும் என்பது விதியில் தெரிவிக்கப்பட்டிருக்கும் போதிலும், 1994 ஆம் ஆண்டு முதல் அதை பின்பற்றவில்லை.
9.அதற்குக் காரணம், விதியில் shall be given என்று அதாவது, தேவைப்பட்டால் தரலாம் என்றவாறு தெரிவிக்கப்பட்டுள்ளதால், வழங்க வேண்டிய கட்டாயம் எழவில்லை. அது சார்ந்த சில ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதையும் ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.
10.அரசு தரப்பு வாதத்தின் மூலம், பட்டதாரி ஆசிரியர்களின் உரிமை நிலைநாட்டப்பட்டது. பல்வேறு குழப்பங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது.
Temporary பிரச்சனை தெறித்து ஓடியது!
Approved probationer பிரச்சனை அப்புறப்படுத்தப்பட்டது!
Confirmation பிரச்சனை காணாமல் போய்விட்டது!
உண்மை வெளி வந்தது! தர்மம் தலை தூக்கியது!
மூத்த வழக்கறிஞர் திரு. அஜ்மல்கான் அவர்கள்:
கடந்த விசாரணையிலேயே அரை மணி நேரத்தில் ஒட்டு மொத்த வழக்கின் நிலைப்பாட்டையும் உச்ச நீதிமன்றத்தில் பட்டியலிட்டு விளக்கினார்கள்!
2015 ஆம் ஆண்டே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் வழக்கு நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு தடை வழங்கப்பட்டமையையும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெறத் தகுதியானவர்கள் என்றும் வாதிட்டு, உரிய விதிகளை எடுத்து வைத்தார்கள்.
மூத்த வழக்கறிஞர் திரு. எஸ்.எஸ்.சுந்தர் அவர்கள்:
அரசு தரப்பில் வழங்க வேண்டிய confirmation குறித்த விளக்கங்களைத் தாம் பட்டியலிட்டு விளக்கினார்கள். பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் மேல்நிலைக் கல்வித் தொகுதியில் நிரந்தர உறுப்பினர்களே என்பதை மேலும் உறுதிபடுத்தினார்கள்.
பணி மாறுதல் குறித்த பல்வேறு விளக்கங்களை எடுத்து வைத்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பதை மேலும் உறுதி செய்தார்கள்!
மூத்த வழக்கறிஞர் திரு. ரவிபிரகாஷ் மெஹரோட்ரா அவர்கள்:
56000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். சுமார் 3000 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. 28000 முதுகலை ஆசிரியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் சுமார் 3000 மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்கள் உள்ளன.
எனவே எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே உயர்நிலைப் பள்ளி த் தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
ஒரே பணியாளர் இரண்டு பணித் தொகுதிகளில் உறுப்பினர்களாக இருக்க முடியாது. ஏதாவது ஒன்றில் மட்டும்தான் உறுப்பினராக இருக்க முடியும்! எனவே பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்கள் இரண்டு பணித் தொகுதிகளிலும் மாறி மாறி பணி மாறுதல் பெறுவது விதிகளுக்குப் புறம்பானது!
1212 பேர் மீளவும் முதுகலை ஆசிரியர்களாக அனுப்பப்பட்டால் எந்த பாதிப்பும் இல்லை.
அவர்களுக்கு மேல்நிலைப் பணித் தொகுதியில் அடுத்த பதவி உயர்வு காத்திருக்கிறது. பணப்பலனும் காத்திருக்கிறது!
1212 உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களும் பட்டதாரி ஆசிரியர்களுக்குச் சொந்தமானவை. அவர்களுக்கு உரியதை இவர்களுக்குத் தருவது உரிமையைப் பறிப்பதாகும். 1000 பணியிடங்களை மீண்டும் பெற வேண்டுமானால், குறைந்தபட்சம் பத்தாண்டுகள் பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்க வேண்டும்!
Lien கிடையாது! எனவே 01.01.2016 முதல் உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும். அதாவது 1212 பேர் கட்டாயம் reversion செய்யப்பட வேண்டும்!
நீதிபதிகளின் முடிவு:
மேற்கண்ட எல்லா தரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பிறகு அரசு தரப்பினரை அழைத்து மீண்டும் அபிடவிட் தாக்கல் செய்யுமாறு கீழ்க்கண்டவாறு ஆணையிட்டு வழக்கை வரும் 17.11.2026 அன்று ஒத்தி வைத்தது.
Heard learned counsel for the parties.
2.Though, as of now, arguments stand concluded; however, the
State is directed to file a detailed affidavit bringing on record
any proposal/scheme as to how the State proposes to deal with the
present scenario in a way that equities can be balanced and there
is no infraction of the law.
3.List on 17.11.2026 at 3.30 p.m.
அநேகமாக அன்றே தீர்ப்பும் வழங்கப்பட்டுவிடும் . அல்லது தீர்ப்பு தேதி மட்டும் தள்ளி வைக்கப்படும்.
வழக்கினை இறுதி வரை நகர்த்தி முடித்து வைக்கத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் எமது பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...