
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அவர்களுக்கு கேக் வழங்க தமிழக அரசு புதிய திட்டத்தை வகுத்துள்ளது. இதற்காக மொத்தம் 9 கோடியே 27 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரும் நவம்பர் 14-ஆம் நாள் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி, மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதலமைச்சர் தலைமையிலான அரசு இந்த விவகாரத்தில் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதோடு, மாணவர்களுக்கு சுவையான கேக்குகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளைத் துரிதப்படுத்தியுள்ளது.
கேக் வகைகள்
இந்தத் திட்டத்தின் கீழ், பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக சுமார் 61 லட்சத்து 84 ஆயிரத்து 566 ஸ்பாஞ்ச் கேக் துண்டுகள் கொள்முதல் செய்யப்பட உள்ளன. ஒவ்வொரு கேக்கும் 45 கிராம் எடைக் கொண்டதாக இருக்கும் எனவும், மாணவர்கள் விரும்பி உண்ணும் வகையில் 'மிக்ஸ்டு ப்ரூட்ஸ்', 'கிளாசிக் வெண்ணிலா' மற்றும் 'ரிச் சாக்லேட்' ஆகிய சுவைகளில் கேக்குகள் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், சில மாற்றுச் சூழல்களைக் கருத்தில் கொண்டு மோர் அல்லது பால் வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
டெண்டர்-நிதி ஒதுக்கீடு
இந்த மிகப்பெரிய திட்டத்தைச் செயல்படுத்தும் விதமாக ரூ.9.27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான தரமான கேக்குகளைக் கொள்முதல் செய்வதற்காக விரைவில் அதிகாரப்பூர்வ டெண்டர் கோரப்பட உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...