சென்னை ஐஐடி-யில் சேர்ந்துள்ள மாணவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குப் கீழே உள்ளவர்கள் என இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடியில் வழங்கப்படும் பி.எஸ் படிப்புகளில் இந்தாண்டு 89 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளதாக அக்கல்வி நிறுவனத்தின் இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார்.
சென்னை ஐஐடி-யில் பி.எஸ் பட்டப்படிப்புகளில் 50,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களின் அனுபவத்தை கூறும் வகையில், ‘Portrait of Many Faces’ என்ற ஆவணப்படத்தை ஈராஸ் (Eros) திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ளது. தரமான உயர்கல்வியை ஆன்லைன் மூலம் கற்கும் வாய்ப்பு கிடைத்த வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட 17 மாணவர்களின் வாழ்க்கை மாற்றங்கள் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஆவணப்படத்தை https://erosnow.com/movie/watch/17000541/portrait-of-many-faces என்ற இணைப்பின் மூலம் பார்க்கலாம்.
இந்த ஆவணப்படம் குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”தேசிய கல்விக் கொள்கை 2020-யை பின்பற்றி இந்தியாவில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தற்போது 30 சதவீதமாக உள்ளது. அதனை 50% உயர்த்த வேண்டும். சென்னை ஐஐடி-யில் அனைத்து மாணவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதற்காக பி.எஸ் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
சென்னை ஐஐடி பி.எஸ் பட்டப்படிப்புகளில் 89 அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்க்கை - இயக்குநர் காமகோடி தகவல் (ETV Bharat Tamil Nadu)
தரவு அறிவியல் மற்றும் புரோகிராமிங், மேலாண்மை மற்றும் தரவு அறிவியல், ஏரோநாட்டிகல் மற்றும் விண்வெளித் தொழில்நுட்பங்கள், எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் உள்ளிட்ட வளர்ந்து வரும் முக்கிய தொழில்நுட்பங்களில் இப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் சேர்ந்துள்ள மாணவர்களில் 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்குப் கீழே உள்ளவர்கள். மேலும், இந்த பாடப்பிரிவில் படித்த மாணவர்களின் அனுபவங்களை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளோம். இதனைப் பார்த்து பிற மாணவர்களும் பி.எஸ் பட்டப்படிப்பில் சேரலாம்.
உலகின் மூலை முடுக்கெல்லாம் இந்த ஆவணப்படம் சென்றடைய வேண்டும். அனைவருக்கும் சமமான, எளிதில் அணுகக்கூடிய தரமான கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற படிப்புகளை வழங்க கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த தனி நபர்களின் அனுபவங்களை ஒன்றிணைப்பதன் மூலம், உயர்கல்வியின் மாற்றத்தை ஏற்படுத்தும் திறனை மனிதநேயப் பார்வையோடு இந்த ஆவணப்படம் வழங்குகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மருத்துவத்துறையை பொறியியல் கோணத்தில் அணுகுகிறோம் - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி
தமிழ்நாட்டில் இருந்து 10 சதவீதம் மாணவர்கள்
தொடர்ந்து பேசிய அவர், “பி.எஸ். பட்டப்படிப்புகளான தரவு அறிவியல் மற்றும் அப்ளிகேஷன்ஸ், எலக்ட்ரானிக் அமைப்பு, ஏரோனாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி தொழில்நுட்பம், மேலாண்மை மற்றும் தரவு அறிவியல் ஆகிய 4 படிப்புகளில் இந்தியா முழுவதிலும் இருந்து 53 ஆயிரம் பேர் படிக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டில் இருந்து 10 முதல் 15 சதவீதம் மாணவர்கள் சேர்ந்து படிக்கிறார்கள்.
அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 80 முதல் 100 வரையில் ஒவ்வொரு ஆண்டும் படிக்கிறார்கள். நடப்பாண்டில் மட்டும் 36 அரசு பள்ளி மாணவர்களும், 53 அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகளும் என மொத்தம் 89 படிக்க இருக்கிறார்கள்.
அனைவருக்கும் ஐ.ஐ.டி.எம். திட்டத்தின் கீழ், சென்னை ஐஐடி முன்னெடுக்கும் திட்டங்களுக்கு அரசு முழு ஒத்துழைப்பு தருகிறது. அரசுப் பள்ளிகளில் படித்து பி.எஸ். பட்டப்படிப்புகளின் சேரும் மாணவர்களுக்கான நிதியை தாட்கோ நிறுவனம் மூலம் கடந்த ஆண்டு போன்று வழங்கி உள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் பாடம் குறித்து விரிவான பயிற்சி அளிக்க 250 பள்ளிகளுக்கு சென்னை ஐஐடி உபகரணங்களை வழங்கி உள்ளன. அதன் மூலம் படித்த மாணவர்கள் பிற கல்வி நிறுவனங்களில் சேர்ந்திருக்க வாய்ப்புள்ளது. மேலும் மாணவர்களுக்கு எலக்ட்ரானிக்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தொடரும்" எனத் தெரிவித்தார்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...