தமிழகத்தையொட்டிய வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.

தமிழகத்தையொட்டிய வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் அடுத்த வாரம் ஒரே நேரத்தில் 2 காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தென்கிழக்கு வங்கக் கடல், அதையொட்டிய அந்தமான் கடலில் அடுத்த வாரம் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதற்கிடையே, அதே காலகட்டத்தில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு காற்றுச் சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால், கேரளத்தையொட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதிகளில் மற்றொரு புயல் சின்னம் உருவாக வாய்ப்புள்ளது.
இப்படி ஒரே நேரத்தில் உருவாகும் இரு புயல் சின்னங்கள் காரணமாக, தென்மேற்கு அரபிக் கடலில் இருந்து கேரளம், தமிழகம் வழியாக தென்கிழக்கு வங்கக் கடல் வரை வளிமண்டலத் தாழ்வுப் பாதை நிலவ வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதுஇதனிடையே, இந்த வானிலை சூழல்கள் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு வாரங்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை நிபுணா்கள் கணித்துள்ளனா்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...