Public Exam 2026
முடிந்தன பொதுத்தேர்வுகள் தேர்ச்சி 90 சதவீதத்தை தாண்டும்
பள்ளி பொதுத்தேர்வுகள், நேற்றுடன் முடிவடைந்தன. பிளஸ் 2
விடைத்தாள் திருத்தும் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பத்தாம் வகுப்பு
விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்கி, 20ம் தேதி வரை, 66 மையங்களில்
நடக்க உள்ளது. கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு தேர்வு மிகவும் எளிதாக
இருந்ததால், இரு தேர்வுகளிலும், தேர்ச்சி, 90 சதவீதத்தை தாண்டும் என,
கல்வித் துறை எதிர்பார்க்கிறது.
அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் 35 ஆயிரம் பேர் சம்பளம் பெறுவதில் சிக்கல்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும்
ஆசிரியர்களுக்கு நிதித்துறை நிதி ஒதுக்கீடு உத்தரவு இருந்தால் மட்டுமே
சம்பளம் பெற முடியும், என கருவூலகத்துறை அறிவித்துள்ளதால் 35 ஆயிரம்
ஆசிரியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு
உதவி பெறும் உயர்நிலையில் 636 ம், ஆயிரத்து 99 மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ் : மாணவர்களுக்கு பெற்று தர உத்தரவு
பள்ளி திறக்கும் நாளில் அனைத்து
மாணவர்களுக்கும் இலவச பஸ் பாஸ் பெற்றுத்தர அனைத்து மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்
வரும் கல்வியாண்டில் 2014-15ல் முதல் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு, உதவி
பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி திறக்கும் நாளான ஜூன்
2ல் இலவச பஸ் பாஸ் பெற்று தர பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் நடவடிக்கை - தேர்தல் ஆணையர்
தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், தங்களது கடமையை சரியாகச் செய்யாவிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை - தேர்தல் ஆணையர்
வாய்ப்பு கொடுங்கள்! செய்து காட்டுகிறோம்! - பகுதி நேர ஆசிரியர்கள்
புறக்கணிக்க படும் பகுதி நேர ஆசிரியர்கள்
அன்பு நண்பர்களே
விழுப்புரம் மாவட்ட அரசு தேர்வு பணிக்கு பகுதி நேர கணினி ஆசிரியர்கள்
புறக்கணிக்கப்ட்டுள்ளார்கள். ஆம் அணைத்து தகுதிகளும் இருந்தும், முறையான பணி ஆணை முதன்மை கல்வி அலுவலர்களால்
பெறபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் அதே முதன்மை கல்வி அலுவலர்களால் புறக்கணிக்க படும் இந்தநிலை
நடக்கிறது.
அரசு பள்ளி மின் கட்டணத்தை நேரடியாக செலுத்த இயக்குனரகம் முடிவு
அரசு ஆரம்ப, நடுநிலைப்
பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதில், குளறுபடி ஏற்பட்டு உள்ளது. இதை சரி
செய்ய, இயக்குனரகம் மூலம் நேரடியாக கட்டணத்தை செலுத்த, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு டி.இ.டி., தேர்வு: 22க்குள் 'ஹால் டிக்கெட்'
சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வுக்கான
(டி.இ.டி.,), 'ஹால் டிக்கெட்' 22ம் தேதிக்குள், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணையதளத்தில் வெளியிடப்படும்' என, அறிவிக்கப்பட்டு
உள்ளது. டி.ஆர்.பி., அறிவிப்பில், 'மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு டி.இ.டி., தேர்வு, மே 21ம் தேதி, 32 மாவட்ட
தலைநகரங்களிலும் நடக்கும்.
மே 21-ல் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர்
தகுதித் தேர்வு மே 21-ஆம் தேதி நடைபெறும். இதற்கான ஹால்
டிக்கெட்டு விண்ணப்பதார்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள்
இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்
செயலர் தண்.வசுந்தராதேவி தெரிவித்தார்.
ஆசிரியர் பயிற்சி தனித்தேர்வு: நாளை முதல் விண்ணப்பம்
ஜூன் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர்
பயிற்சி தனி தேர்வுக்கு, நாளை முதல் 17 வரை,
தேர்வுத் துறை இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் அறிவித்து உள்ளார்.
டி.டி.எட் தேர்வு, தோல்வி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் : தேர்வுத்துறை அறிவிப்பு
ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து
தேர்வு எழுதி, தோல்வி அடைந்த மாணவர்கள் 10ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது. அரசு
ஆசிரியர் பள்ளிகளில் டிடிஎட் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு நடக்கிறது.
தபாலில் அனுப்பிய சான்றுகள் மாயம்: இழப்பீடு வழங்க அஞ்சல் துறைக்கு உத்தரவு.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு அனுப்பிய சான்றிதழ்கள் சென்று சேரவில்லை என, தொடரப்பட்ட வழக்கில், 'அஞ்சல் துறை, 8,000 ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என, மாநில நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.வேலூர், ஆரணி சாலையை சேர்ந்த, வெங்கடேஷ் மனைவி லட்சுமி பிரபா, தமிழ்நாடு மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு:
இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் உள்ள தனியார் / அரசு / ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி பள்ளிகளுக்கு 2013-14ம் ஆண்டிற்கான சுழற்கேடயங்கள் வழங்க பள்ளிகளின் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு
அ.தே.இ - மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வு - தேர்வு முகாம் பணியில் ஈடுப்பட்டிருக்கும் ஆசிரியர்கள் / அலுவலக பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுப்பட்டிருப்பின் முகாம் பணியின் செலவினத்திலிருந்து பயணப்படி / தினப்படி வழங்க கூடாது என இயக்குனர் உத்தரவு
2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் - சார்பு
தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறை~2014-2015ஆம் கல்வியாண்டிற்கு உண்டான பள்ளி மாணவ மாணவியர் பயண அட்டைகள் கால தாமதமின்றி வழங்கிட மேற்கொள்ள வேண்டியது- சார்பு
தபால் ஓட்டு நடைமுறை விதிகளால் அதிருப்தி : ஓட்டு வீணாகும் பரிதாபம்
தபால் ஓட்டுக்காக வழங்கப்படும், படிவம் - 12ல்,
வாக்காளர் அடையாள எண் மற்றும் இதர விவரங்கள் சேகரிக்க வேண்டிய கட்டாயம்
உள்ளதால், ஒட்டு மொத்த போலீசாரும், தபால் ஓட்டு போட முடியாமல் போவதாக
புலம்புகின்றனர். தமிழகத்தில் வரும், 24ம் தேதி நடக்கும், லோக்சபா
தேர்தலில், 100 சதவீத ஓட்டு பதிவாக, பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.






