Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு

449307 
ஓட்டுச்சாவடி பெண் பணியாளர் தேர்வு : தலைமை தேர்தல் அதிகாரி புது உத்தரவு.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் சட் டசபை சுற்றறிக்கை: தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பிய சட்டசபை பொதுத்தேர்தலுக்கு ஒட்டுச்சாவடிகளில் பணிபுரியும் தலைமை அலுவலர்கள், ஓட்டுப்பதிவு நிலை அலுவலர்களுக்கு கம்ப்யூட்டர் குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கப்படுகிறது. ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சா வடிகளில் பணிபுரிய வேண்டிய பெண் பணியாளர்களை கம்ப்யூட்டர் மூலம் தேர்வு செய்யக் கூடாது. அதற்கு பதிலாக, அவர்கள் தேர்தல் பார்வையாளர்களின் வழிகாட்டுதலின்படி அருகிலுள்ள ஓட்டுச் சாவடிகளுக்கு 'மேனுவல்' அடிப்படையில் பணியமர்த்த வேண்டும்.

இதன்மூலம் ஓட்டுப்பதிவு நாளில் பெண்கள் காலையில் ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று உரிய நேரத்தில் கடமையை செய்ய முடியும். தொலைதூரங்களில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பெண் பணியாளர்கள் யாரையும் பணியமர்த்த கூடாது. ஓட்டுப்பதிவு பணியில் ஈடுபடும் பெண் பணியாளர்களுக்கு போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் செய்து தர வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive