மத்திய
இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பயிலும்
மாணவர்களுக்கு, புதிய கல்விக் கொள்கையின்படி, இந்தாண்டு, ஒன்பதாம் வகுப்பு
பாடப்புத்தகங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி முதல், புதிய
கல்வியாண்டு துவங்கி உள்ள நிலையில், ஒன்பதாம் வகுப்பு பாட புத்தகங்கள்
கிடைக்காதது சர்ச்சையானது.
இதையடுத்து, பாட புத்தகங்கள் தயாரிப்பு பணி விறுவிறுப்பாக நடப்பதால், வரும் 15ம் தேதிக்குள் விற்பனைக்கு வெளியிடப்படும் என, என்.சி.இ.ஆர்.டி., தெரிவித்தது. இதையடுத்து தற்போது, ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன், அறிவியல் பாடத்துக்கான புத்தகங்க ளை, என்.சி.இ.ஆர்.டி. , டில்லியில் வெளியிட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...