பொதுவாக வாக்குச்சாவடிக்குள் செல்போன் கொண்டு செல்ல அனுமதி இல்லை. இதனால், தொலைவில் இருந்து வரும் வாக்காளர்கள் தங்கள் செல்போனை எங்கே வைப்பது என்று தெரியாமல் தவித்து வந்தனர். இந்த முறை ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் செல்போன்களை ஒப்படைத்துவிட்டு, அதற்கான டோக்கனைப் பெற்றுக்கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் டோக்கனை காண்பித்து தங்கள் செல்போனை மீண்டும் பெற்றுக் கொள்ளலாம்
#வேட்பாளர்களின் '#கலர்'#போட்டோ
வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளர் பெயர் மற்றும் சின்னத்திற்கு இடையே அவர்களின் புகைப்படம் இடம்பெறுவது வழக்கம்.
ஆனால், இந்த முறை அது வண்ணப் புகைப்படமாக மாற்றப்பட்டுள்ளது. ஒரே தொகுதியில் ஒரே பெயரில் பல வேட்பாளர்கள் போட்டியிடும் போது வாக்காளர்கள் சின்னத்தை மட்டும் பார்க்காமல் வேட்பாளரின் முகத்தை வைத்தே சரியான நபரை அடையாளம் காண இது உதவும். கருப்பு-வெள்ளை புகைப்படங்களை விட வண்ணப் புகைப்படங்கள் அதிக
துல்லியத்தன்மையுடன் இருக்கும் என்பதால் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
#பசுமை_வாக்குச்சாவடி_
#மையங்கள்
வாக்காளர்களைக் கவரும் வகையில், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலா மூன்று என்ற அடிப்படையில் சுமார் 700-க்கும் மேற்பட்ட 'மாதிரி வாக்குச்சாவடி மையங்கள்' உருவாக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயில்கள் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, வெயிலின் தாக்கத்தைத் தவிர்க்கப் பந்தல்கள் மற்றும் குளிர்ச்சியான குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் மாதிரி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், இந்த முறை சுற்றுச்சூழலை முன்னிறுத்தும் வகையில் பல மாதிரி வாக்குச்சாவடிகள் 'பசுமை மையங்களாக மாற்றப்பட்டுள்ளன. அங்கு நெகிழிப் பொருட்கள் தவிர்க்கப்பட்டு, இயற்கை சார்ந்த அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. சில இடங்களில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதிகள் மற்றும் பாலூட்டும் அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
#விரிவுப்படுத்தப்பட்ட
#தபால்_வாக்கு_வசதி
தேர்தல் நாளில் தங்களின் அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவதால் வாக்குச்சாவடிக்கு வர முடியாத அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு
துறையினரை 'அத்தியாவசியப் பணிகளில் உள்ள வாக்காளர்கள்' எனத் தேர்தல் கமிஷன் வகைப்படுத்தியுள்ளது. மேலும் முதல் முறையாக போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, குடிநீர் வழங்கல் துறை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகளில் பணியாற்றுவோர் தபால் வாக்கு அளிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
#கியூஆர்_கோடு_வசதி
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடியைக் கண்டறிவதிலும், வாக்களிப்பதிலும் நிலவும் சிரமங்களைக் குறைக்க இந்த முறை பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் ‘வாக்காளர் தகவல் சீட்டு' நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் முறையாக கியூஆர் கோடு வசதி இணைக்கப்பட்டுள்ளது. இந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்வதன் மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்குச்சாவடி அமைந்துள்ள இடம், வரிசை எண் மற்றும் பாகம் எண் போன்ற விவரங்களைச் சில நொடிகளில் தெரிந்துகொள்ளலாம். இந்தச் சீட்டுகள் வாக்காளர்களின் வீடுகளுக்கே வினியோகிக்கப்படும்







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...