Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது



           ஆசிரியர்த் தகுதித் தேர்வை முன்னிட்டு 17.08.2013 சனிக்கிழமை அன்று தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

          முறையான அறிவிப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளிவரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வு - ஹால் டிக்கெட் வெளியீடு


 TO DOWNLOAD HALL TICKET CLICK HERE...



             டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 17 லட்சத்து 552 பேர் விண்ணப்பித்த நிலையில், 14 லட்சத்து 653 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டுள்ளன.





இரு அதிகாரிகளின் பணியிட மாற்றம், டி.இ.டி., தேர்வுக்குப் பின் அமலுக்கு வரும் என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா தெரிவித்துள்ளார்.


                   வரும், 17, 18ம் தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. இதை, ஏழு லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளை கவனிக்கும் பணிகளில், டி.ஆர்.பி., அதிகாரிகள் மட்டுமில்லாமல், கல்வித் துறை அதிகாரிகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.




சுதந்திர தினத்தில் "டிமிக்கி': ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை "கிடுக்கிப்படி'


                சுதந்திர தினத்தன்று பள்ளிகளுக்கு, "டிமிக்கி' கொடுக்கும் ஆசிரியர்களுக்கு, "கிடுக்கிப்பிடி' போடப்பட்டு உள்ளது. தனிவருகைப் பதிவேட்டில் பதிவு செய்யவும், வராத ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.




குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை



                    "பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.



பி.எட். கலந்தாய்வு: இரண்டு நாள்களில் 4,000 விண்ணப்பங்கள் விநியோகம்



               பி.எட்., மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு கடந்த இரு தினங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.



பள்ளிக்கல்வித்துறையில் புதிய இணை இயக்குநர்கள் பொறுப்பேற்பு


             பள்ளிக்கல்வித்துறையில் அண்மையில் இயக்குனர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலம் நியமிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து தற்பொழுது புதியதாக இணை இயக்குநர்கள் பொறுப்பேற்றுள்ள பட்டியல் வெளியாகியுள்ளது. 
*இணை இயக்குநர் (பணியாளர்த் தொகுதி) திரு. கருப்பசாமி அவர்களையும்,

TET Online Model Test Available in Rani TET Park


TET Paper 2

Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5
Model Test 6
Model Test 7

TET Paper 1

Model Test 1
Model Test 2
Model Test 3
Model Test 4
Model Test 5


Contact - 9952787972

பள்ளிகளில் எதிர்பாராத நிகழ்வுகள்: உடனடியாக தெரிவிக்க அரசு உத்தரவு

        "பள்ளிகளில் நடக்கும் எதிர்பாராத நிகழ்வுகள் குறித்து, உடனடியாக பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு, தலைமை ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்" என, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

கல்வித்தகுதி அடிப்படையில் பதவி உயர்வு: சத்துணவு ஊழியர்கள் வலியுறுத்தல்


           "கல்வித் தகுதியுள்ள சத்துணவு உதவியாளர், சமையலர் அனைவருக்கும் அமைப்பாளர் பதவி உயர்வு வழங்கி, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்" என, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

அரசு பள்ளிகள் தரம் உயர்வு அறிவிப்புடன் நிறுத்தம் - Dinamalar


           தமிழகத்தில் உள்ள 50 அரசு நடுநிலை பள்ளிகள், உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும், என்ற அரசின் அறிவிப்பு, நிறைவேற்றப்படாததால், மாணவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு


             தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சிறப்பு வழிகாட்டி புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்


          பொருளாதாரத்தில் பின்தங்கிய, எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த, பள்ளி மாணவர்களுக்கு, வினாக்கள் அடங்கிய, "சிறப்பு வழிகாட்டி" புத்தகம் தயாரிக்கும் பணியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஈடுபட்டு உள்ளது.

வரலாறு: 14 ஆம் நூற்றாண்டின் அரிய "செப்பு காசு" கண்டுபிடிப்பு


         கடந்த 14 ஆம் நூற்றாண்டின் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட, அரிய செப்பு காசு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பூதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமன நாளில் இருந்து பணி வரன்முறை தமிழக அரசு உத்தரவு


           அரசு பள்ளிகளில் கடந்த 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.800, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,200, முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.1,400 தொகுப்பூதியமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் தொகுப்பூதிய ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் ஆசிரியர்கள் நியமன நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும் பணி நியமன நாள் முதல் பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது. 

இதுகுறித்து உரிய தெளிவுரை கேட்டு பள்ளிக் கல்வி இயக்குனர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதுதொடர்பாக பள்ளி கல்வி செயலர் சபிதாவின் விளக்கக் கடிதம்: ஏற்கனவே 2012 ஜூன்26ம் தேதி அரசு கடிதத்தில் 1990-91, 1991-92ம் ஆண்டுகளில் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விதிகள் ஏதும் தளர்வு செய்ய கூடாது.  இந்த நிபந்தனை அடிப்படையில் பணி நியமன நாள் முதல் முன்தேதியிட்டு பணிவரன்முறை செய்து காலமுறை ஊதியம் வழங்கலாம் எனவும், பணிவரன்முறை செய்த நாளில் இருந்து பணிமூப்பு நிர்ணயிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணி விதிகளில் பொதுவிதி 35(ஏ) பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யலாம் என்றும், பணி மாறுதல் மூலம் நியமிக்கப்பட்டவர்களுக்கு விதி 35(ஏஏ)யை பின்பற்றி பணிமூப்பு நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு 1990,91, 1991,92ல் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் சமமாக பொருந்தும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கு என தனியாக தெளிவுரை வழங்க அவசியம் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முதல்வருக்கு, 10 ஆயிரம் பேர் கடிதம்


               ஆசிரியர் தகுதி தேர்வு மற்றும் அதனடிப்படையிலான பணி நியமனத்தில், இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும், 10 ஆயிரம் பேர், முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.



மத்திய அரசு ஊதியத்துடன் ஒப்பிட்டால் இடைநிலை ஆசிரியரின் ஒரு மாத இழப்பு


மத்திய அரசு ஊதியம்:

அடிப்படை ஊதியம்        : 9300
தர ஊதியம்                         : 4200
அகவிலைப்படி (80%)    : 10800
மொத்தம்                           : 24300

தமிழ்நாடு ஊதியம்:
 
அடிப்படை ஊதியம்       : 5200
தர ஊதியம்                        : 2800
தனி ஊதியம்                      : 750
அகவிலைப்படி (80%)     : 7000
மொத்தம்                           : 15750

ஒரு மாத இழப்பு : 8550/-


ஆசிரியர் தகுதித் தேர்வுக்குப் திருத்தப்பட்ட ஹால்டிக்கெட்டுகள் இணையதளத்தில் பதிவேற்றம்


              ஆசிரியர் தகுதித் தேர்வைக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொறுப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


 

அரசு பள்ளியில் தகவல் தொழில்நுட்ப கல்வி: மத்திய அரசு ரூ.86 கோடி ஒதுக்கீடு


              தமிழகம் முழுவதும் 4,340 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், மத்திய அரசு நிதியுதவியுடன், தகவல் தொழில்நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.


முதுகலை ஆசிரியர் தேர்வில் தவறான கேள்வியை நீக்க முடிவு


              முதுகலை ஆசிரியர் தேர்வுக்கான, இறுதி, "கீ-ஆன்சர்', வரும், 20ம் தேதிக்குள் வெளியிடப்படும் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த மாதம், 21ம் தேதி, முதுகலை ஆசிரியர் தேர்வு நடந்தது. 1.67 லட்சம் பேர், தேர்வை எழுதியுள்ளனர். இதற்கான, தற்காலிக, "கீ-ஆன்சர்', டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கேள்வி மற்றும் விடைகள் குறித்து, 1,000 தேர்வர்கள், மாற்று கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.




குரூப் 4 பதவிக்கு 25ல் எழுத்து தேர்வு 5,566 பணியிடத்துக்கு 17 லட்சம் பேர் போட்டி


                  குரூப் 4 பதவியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்ப வருகிற 25ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இத்தேர்வுtக்கு 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வின்போது கால்குலேட்டர், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் மாதம்தோறும் 12 பள்ளிகளை பார்வையிட உத்தரவு


               மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள் ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யவேண்டிய சார்நிலை அலுவலகங்கள், பார்வையிட வேண்டிய பள்ளிகள் எண்ணிக்கையில் குறைந்தபட்ச இலக்கை பூர்த்தி செய்ய வேண்டும். 


கறிவேப்பிலை பற்றிய ஒரு அறிய குறிப்பு, புற்று நோய் அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை


              உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர்.

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சோதனை வெற்றி



             இந்தியாவில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஐஎன்எஸ் அரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சியையும், ராணுவ பலத்தையும் ஒருங்கே பறைசாற்றும்

வகையில் இந்த ஐஎன்எஸ் ஹரிஹந்த் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் உருவாக்கப்பட்டுள்ளது.


TNTET QUESTIONS FOR TAMIL - PAPER 1 & 2


10 நிமிடம் - 10 கேள்விகள் - குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் எடுக்க நீங்கள் தயாரா?


CLICK HERE 4 VISIT -


பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்த வேண்டும்: அரசு உத்தரவு


              தமிழகத்தில் பள்ளிகளில் "செஸ்" போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழ், ஆங்கில மொழி வாசிப்பு திறனுக்கு உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பாதுகாக்க விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு



                  நேர்மையாக பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசியல் காரணங்களுக்காக, "சஸ்பெண்ட்' செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வதை தடை செய்யும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.



பி.எட். மதிப்பெண் குளறுபடி: சரிசெய்து வெளியிட்டது பல்கலைக்கழகம்


             பி.எட். மதிப்பெண் பட்டியலில் ஏற்பட்ட குளறுபடியை தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சரிசெய்து பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.




மத்திய அரசு PFRDA மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் நாளன்று மத்திய அரசு அலுவலகங் -களில் இரண்டு மணி நேரம் வெளிநடப்பு செய்து ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு



              மத்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத்  திட்டம் / PFRDA (ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம்) மசோதாவை தாக்கல் செய்து நடைமுறைபடுத்த திட்டமிட்டுள்ளது. 

குறைந்தபட்ச மாதாந்திர பென்ஷன் ரூ.1,000 கிடைக்குமா?


              "பென்ஷன்தாரர்களின் குறைந்தபட்ச பென்ஷன் தொகையை, 1,000 ரூபாயாக நிர்ணயம் செய்ய வேண்டும்; அதற்காக மத்திய அரசு இப்போது வழங்கும், 1.16 சதவீத பங்கை, 1.79 ஆக அதிகரிக்க வேண்டும்' என, மத்திய தொழிலாளர் துறைக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.




பி.எட்., விண்ணப்ப விற்பனை துவங்கியது


              பி.எட்., படிப்பிற்கான விண்ணப்ப விற்பனை, நேற்று துவங்கியது. ரம்ஜான் பண்டிகை என்பதால், பெரும்பாலான ஆசிரியர் பயிற்சி கல்வி நிறுவனங்களில் கூட்டம் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.




அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் கல்வி: புதிய திட்டம் விரைவில் அமல்



          4340 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தகவல் தொழில் நுட்ப கல்வி கற்பித்தல் திட்டம் தொடங்கப்படுகிறது.



TNTET - ENGLISH QUESTIONS FOR - PAPER 2 & PAPER 1



for daily new useful updates.

இந்த தேர்வின் சிறப்பம்சங்கள்

  1. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு தயாராகும் ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையிலான கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும்.
  2. ஒவ்வொரு முறையும் கேள்விகளின் வரிசை முறை தானாகவே மாறிக்கொள்ளும்.
  3. ஒவ்வொரு முறையும் கேள்விகளுக்கான விடைகளின் வரிசை முறைகளும் தானாகவே மாறிக்கொள்ளும்.
  4. தேர்வை முடித்த உடன் அனைத்து கேள்விகளுக்கான விடையும் சரியா தவறா என தெரிந்து கொள்ளலாம்.
  5. தேர்வில் 60 சதவீதத்திற்கு மேல் பெற்றவர்களுக்கு பெயருடன் கூடிய சான்றிதழ் உடனடியாக வெளியிடப்படும்.
  6. தேர்வில் தாங்கள் எதிர்கொண்ட வினா மற்றும் விடைகளை உடனடியாக PDF - Format ல் Print எடுத்துக்கொண்டு தேவையான போது பயன்படுத்திக்கொள்ள முடியும்.
  7. தினமும் ஒரு பாடம் வீதம் இந்த வலைதளத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
  8. இந்த தேர்வுகள் முற்றிலும் இலவசமானது.
  9. விரைவில் Group - 4 தேர்வுக்கு பயன்படும் வினாக்களும் இலவசமாக பயன்பெறும் வகையில் பதிவேற்றப்படும்.
  10. முயற்சி! பயிற்சி! வெற்றி! - வாழ்த்துக்கள்!.

பி.எட் ..,தேர்வில் தோல்வியடைந்து பின் வெற்றி பெற்றவர்களுக்கு ஆசிரியர் தகுதி தேர்வுச் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு


          பி.எட்., தேர்வில் தோல்வியடைந்து, பின் வெற்றி பெற்றவருக்கு, ஆசிரியர் தகுதி சான்றிதழ் வழங்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

              கடந்த ஆண்டு, ஜூன் மாதம் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில், வினோத்குமார் என்பவர் கலந்து கொண்டார். விளக்க குறிப்பேட்டின்படி, பி.எட்., அல்லது ஆசிரியர் கல்வியில் டிப்ளமோ இறுதி ஆண்டு தேர்வை எழுதுபவர்களும், ஆசிரியர் தகுதி தேர்வை எழுத முடியும்.





இடைநிலை ஆசிரியர்களில் புதிய நியமனதாரர்களுக்கு ஆறாவது ஊதியகுழுவினால் ஊதிய இழப்பே என்பதை விளக்கும் கட்டுரை.


                ஆறாவது ஊதியக்குழு ஊதிய விகிதம் 01.6.2009 முதல் இடைநிலை ஆசிரியர்களாக புதியதாக நியமிக்கப்படடவர்களுக்கு, முந்தைய ஊதிய விகிதத்தை ஒப்பிடுகையில் ஊதிய இழப்பையே ஏற்படுத்தியுள்ளது. 1.6.2009 தேதியை கொண்டு பழைய ஊதிய விகிதம் மற்றும் புதிய ஊதிய விகிதம் இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தால் விளங்கும்.

குரூப் - 4 தேர்வு விவரங்களை சரிபார்க்க தேர்வர்களுக்கு வேண்டுகோள் | TNPSC GROUP - IV Application Acknowledgement


           "குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள், தங்களது விவரங்கள் சரியாக உள்ளதா என்பதை, தேர்வாணைய இணைய தளத்தில் பார்த்து, உறுதி செய்துகொள்ளலாம்' என, தேர்வாணையம் அறிவித்துள்ளது.


தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை

             மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மாதந்தோறும் மேற்கொள்ள வேண்டிய AEEO அலுவலக ஆய்வு, பார்வை மற்றும் பள்ளிப் பார்வைப் பணிகளை மாதவாரியாக பட்டியலிட்டு தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவுரை

WISH YOU HAPPY RAMZAN!




ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.

               பள்ளிக்கல்வி - இளநிலைப் பட்டப்படிப்பு (UG) படிக்காமல் நேரடியாக தமிழகத்தில் உள்ள திறந்தவெளிப் பல்கலைக்கழத்தில் (Open Universities) முதுகலை பட்டப்படிப்பு (PG) பெற்ற ஆசிரியர்களுக்கு உயர்கல்வி தகுதிக்காக வழங்கப்படும் ஊக்க ஊதிய உயர்வு வழங்குவதை இரத்து செய்து அரசாணை 118 வெளியீடு.


முதல்வர் உத்தரவு

              மாண்புமிகு முதலமைச்சரின் தகுதி பரிசுத் தொகைத் திட்டம் - 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் BC / MBC / DNC / சிறுபான்மையர் மாணவ / மாணவியர்களில் மாநில அளவில் முதல் 500 இடங்களை பெரும் மாணவர்களுக்கு ரூ.3000/- அவர்களின் உயர்கல்விக்காக வழங்க முதல்வர் உத்தரவு


மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


               U-DISE - பள்ளிகளின் பட்டியலை இறுதி செய்தல், அறிக்கை சமர்பித்தல் அறிவுரை வழங்கி அகை மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

         அனைத்து வகை பள்ளிகள் / கல்வி அலுவலகங்களில் 15.08.2013 அன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்படுவதை உறுதி செய்து அறிக்கை அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு


TRB - TNTET EXAM AUGUST 2013 HELP LINE


 TRB - TNTET HELP LINE 

044 - 28272455, 
044 - 64525208, 
044 - 64525209.

TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் பிழையா ? என்ன செய்யலாம்?

TET HALL TICKET MISTAKES? டி.இ.டி ஹால் டிக்கெட்டில் பிழையா ? என்ன செய்யலாம்?


           வரும் ஆகஸ்ட் 17 மற்றும் 18ஆம் தேதி நடைபெறும் டி.இ.டி முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் கடந்த 6ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. பல்வேறு பிரச்சனைகளுக்கு பின் டவுன்லோட் செய்த பின் பார்த்ததில் அதில் தேர்வு மைய மாவட்டம், பெயர், புகைப்படம் போன்ற பதிவுகள் மாறி வந்ததால், தேர்வர்கள் அச்சம் அடைந்தனர். 

10ம் வகுப்பு சிறுப்புத் துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு


           பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைத்தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.



தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு

          1 முதல் 4 வகுப்புகளுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் (SABL), 6 முதல் 8 வரை படைப்பாற்றல் கல்வி முறையை கண்காணித்து, பள்ளிகளை வகைப்படுத்தி அறிக்கை ஒவ்வொரு மாதமும் 10ஆம் தேதிக்குள் அனுப்ப தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு


எம்.பில்., பிஎச்.டி., போன்ற பகுதி நேர ஆய்வு கல்விக்கு இயக்குனர் அனுமதி பெற்று படிக்கலாம் - நாளிதழ் செய்தி



             அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.



அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடியை முதலிடத்திற்கு கொண்டு வருவதே லட்சியம்: கல்வி அதிகாரி



          அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வேன்" என்று புதிய முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.



அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடியை முதலிடத்திற்கு கொண்டு வருவதே லட்சியம்: கல்வி அதிகாரி


          அரசு பொதுத் தேர்வில் தூத்துக்குடி மாவட்டத்தை தேர்ச்சி சதவீதத்தில் மாநிலத்தில் முதலிடத்திற்கு கொண்டு வருவேன், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்வேன்" என்று புதிய முதன்மை கல்வி அதிகாரி முனுசாமி தெரிவித்தார்.

TET - தகுதி மதிப்பெண் குறைக்க கோரி பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரதம்


          "ஆசிரியர் தகுதி தேர்வில், பார்வையற்ற ஆசிரியர்கள் தகுதி பெற, 40 சதவீத மதிப்பெண்களை, குறைந்தபட்ச மதிப்பெண்களாக நிர்ணயிக்க வேண்டும்" என பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரே நாளில் டி.இ.டி., - ரயில்வே தேர்வு: குழப்பத்தில் தேர்வர்கள்


          டி.இ.டி., மற்றும் ரயில்வே தேர்வுகள், ஒரே நாளில் (18ம் தேதி) நடப்பதால், இந்த இரு தேர்வுகளுக்கும் விண்ணப்பித்துள்ள, 5,000த்திற்கும் மேற்பட்டோர், எந்தத் தேர்வை எழுதுவது என, தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து உள்ளனர்.

ரூ.26.39 கோடி செலவில் 5 புதிய ஐ.டி.ஐ.,க்கள்: முதல்வர் உத்தரவு


         ஐந்து புதிய ஐ.டி.ஐ.,க்களை, 26.39 கோடி ரூபாய் செலவில், இந்த கல்வியாண்டிலேயே துவக்க, முதல்வர் ஜெயலலிதா, உத்தரவிட்டு உள்ளார்.

அரசு பள்ளி ஆசிரியர்கள் நேரடி வகுப்புகளில் சேர்ந்து படிக்க தடை


          அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நேரடியாக, பட்டம், முதுகலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து படிக்க, தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், அரசு பள்ளிகளில் பணிபுரியும், ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள், தொலைதூரக் கல்வி இயக்கங்கள் மூலம் உயர்கல்வி பயிலவும், பகுதி நேரமாக சேர்ந்து படிக்கவும், அரசு அனுமதித்துள்ளது.

பி.எட்., மதிப்பெண் பட்டியலில் குளறுபடி: குவியும் மாணவர்கள்


           பி.எட்., மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில், மதிப்பெண் விவரங்கள் தவறாக அச்சாகி உள்ளன. இதையடுத்து, பல மாவட்டங்களில் இருந்து வந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், வெலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.

பீகாரில் மதிய உணவு சாப்பிட்ட ஆசிரியர், மாணவர்கள் உடல்நிலை பாதிப்பு


           பீகாரில், மதிய உணவு சாப்பிட்ட, ஆசிரியர் மற்றும், 15 பள்ளி மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெற விடா முயற்சி, சகிப்பு தன்மை அவசியம்



           "மாணவர்களுக்கு விடாமுயற்சியும், சகிப்பு தன்மையும் இருந்தால் அனைத்து சவால்களை வெற்றி கொள்ளலாம்" என முன்னாள் துணைவேந்தர் வைத்தியநாதன் தெரிவித்தார்.



எம்.பில் / பி.எச்.டி., ஊக்க ஊதியம் தொடர்பாக அரசு பிறபித்த தெளிவுரை ஆணைக்கு சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால் தடை விதித்து உத்தரவு.


               தொடக்க / பள்ளிக்கல்வித்துறையில் உள்ள நடுநிலை / உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு எம்.பில்., / பி.எச்.டி படித்தவர்களுக்கு இரண்டாம் ஊக்க ஊதியம் வழங்க அரசாணை எண்.18 நாள்.18.01.2013 மூலம் தமிழக அரசு உத்தரவிட்டது. 


SMDC சிறப்பு கூட்டம் நடத்த இயக்குநர் உத்தரவு


         அஇகதி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் SMDC சிறப்பு கூட்டம் 15.08.2013 அன்று நடத்த இயக்குநர் உத்தரவு



TNTET - How to get More Marks in Social Science ?


TNTET - How to get More Marks in Social Science ? - 
Useful Tips Available.



ஆசிரியர் தகுதித் தேர்வு நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்ய முடியவில்லையா? | TET HALL TICKET DOWNLOAD PROBLEM ?


                பயப்படவேண்டாம். TRB தளத்திலிருந்து ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு நுழைவுச்சீட்டு பதிவிறக்குவதில் உங்களுக்கு பிரச்சினை இருந்தால், இம்முறையினை முயற்சி செய்து பாருங்கள்.

BTRE Seniority List 2012-13

              2012-13ம் கல்வியாண்டில் வட்டார வள மையங்களில் (BRC) பணிபுரிந்து வரும் ஆசிரியர் பயிற்றுநர்களை பட்டதாரி ஆசிரியர்களாக மாறுதல் வழங்க திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு| BTRE Seniority List 2012-13


பள்ளிகளுக்கு திடீர் "விசிட்' அடித்து ஆசிரியர் வேலை பார்த்த அமைச்சர்


                  பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு, நேற்று, திடீர், "விசிட்' அடித்தார். அப்போது, மாணவர்களிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு, அவர்களின் கற்றல் திறன் குறித்து, ஆய்வு செய்தார்.



டி.இ.டி., தேர்வை கண்காணிக்க கலெக்டர்கள் தலைமையில் குழு


               ஆகஸ்ட் 17,18 தேதிகளில் நடக்க உள்ள டி.இ.டி., தேர்வை கண்காணிக்க, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில், சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன,'' என, டி.ஆர்.பி., புதிய தலைவர், விபு நய்யார் தெரிவித்தார். அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, வரும், 17,18 தேதிகளில், டி.இ.டி., போட்டித் தேர்வு நடக்கிறது. 


ஆசிரியர்கள் நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை, ஆனால் தொலைதூரக் கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.


             அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பி.எட். படிப்பு படிக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஆனால், தொலைதூரக்கல்வி மூலம் மேற்படிப்பு படிக்க எவ்வித தடையும் இல்லை.



TNTET - Special Hints -- (Every Day New Hints Available)



How to get more marks in TNTET - Science ?



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

75 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

75 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive