Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 4 பதவிக்கு 25ல் எழுத்து தேர்வு 5,566 பணியிடத்துக்கு 17 லட்சம் பேர் போட்டி


                  குரூப் 4 பதவியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்ப வருகிற 25ம் தேதி எழுத்து தேர்வு நடக்கிறது. இத்தேர்வுtக்கு 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தேர்வின்போது கால்குலேட்டர், செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



             தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூன் 14ம் தேதி வெளியிட்டது. இத்தேர்வுக்கு 17 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.

               தேர்வுக்கு சரியான முறையில் விவரங்களை பதிவு செய்தவர்கள் விவரம் டிஎன்பிஎஸ்சியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதில், விண்ணப்பித்த 3 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. விடுபட்டவர்களில் தகுதியான விண்ணப்பதாரர்கள், பெயர், பதிவு எண் மற்றும் விண்ணப்பம், தேர்வு கட்டணம் செலுத்திய விவரம் ஆகியவற்றை தேர்வாணையத்தின் முகவரியான நீஷீஸீtணீநீttஸீஜீsநீ@ரீனீணீவீறீ.நீஷீனீ  அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

                   அதன் பின்னர், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு தேர்வாளர்களுக்கு ஒரு வாரத்திற்குள் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிகிறது. வருகிற 25ம் தேதி காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை எழுத்து தேர்வு நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 240 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை மாவட்டம் சென்னை சென்ட்ரல், சென்னை வடக்கு, சென்னை தெற்கு என்று பிரிக்கப்பட்டு 18 மையங்களில் எழுத்து தேர்வு நடக்கிறது.தேர்வு கூடத்திற்கு அனுமதிக்கப்பட்ட பேனா தவிர, புத்தகம், குறிப்புகள் தனிதாள்கள், கணித மற்றும் வரைபடகருவிகள், மடக்கை அட்டவணை, பாடப்புத்தகங்கள், பொது குறிப்பு தாள்கள் ஆகியவற்றை கொண்டு வரக்கூடாது.

                மேலும், பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு கருவிகள், பதிவு கருவிகள் ஆகியவற்றை தனியாகவோ விண்ணப்பதாரரின் மோதிரம் அல்லது கைக்கடிகாரத்தின் இணைப்பாகவோ கொண்டு செல்ல கூடாது. சோதனையின்போது அவைகள் கண்டு பிடிக்கப்பட்டால் அவர்கள் தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்களது விடைத்தாள் செல்லாததாக்கப்படுவதுடன் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கியும் வைக்கப்படுவார்கள்.1000 பேருக்கு மேல் தேர்வு எழுதும் தேர்வு மையங்கள் மற்றும் பதற்றமான, சட்டம் ஒழுங்கு பாதிப்பு அபாயம் உள்ள மையங்களில் தேர்வுகள் அனைத்தும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive