NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப்-4 தேர்வில் 2 லட்சம் பேர் ஆப்சென்ட்


          தமிழகம் முழுவதும், நேற்று நடந்த, குரூப்-4 தேர்வை, 2 லட்சம் பேர் எழுதவில்லை. தேர்வுக்கான, கீ-ஆன்சர் இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
              தமிழக அரசின் பல்வேறு துறைகளிலுள்ள, இளநிலை எழுத்தர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரைவாளர், வரித்தண்டலர் உள்ளிட்ட பதவிகளில், 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயம், குரூப்-4 தேர்வை, நேற்று நடத்தியது. இத்தேர்வை எழுத, 17.06 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில், தகுதியில்லாதோர் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தாதோர் என, 3.01 லட்சம் பேரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. மீதமுள்ள, 14.05 லட்சம் பேர், தேர்வு எழுதத் தகுதியுடையோர் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்தது.
             இவர்களுக்கு, நேற்று காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை தேர்வு நடந்தது. இத்தேர்வை, தமிழகம் முழுவதும், 244 மையங்களில், 4,764 தேர்வுக் கூடங்களில், 12 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் மட்டும், 18 மையங்களில் தேர்வு நடந்தது. இத்தேர்வில், தமிழகம் முழுவதிலும் இருந்து, 2 லட்சம் பேர் பங்கேற்கவில்லை.
              தேர்வாணையத் தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், "கடந்தாண்டு, 2012, ஜூலை 7ம் தேதி நடைபெற்ற, 10,266 இடங்களுக்கான, குரூப்-4 தேர்வை, 10.34 லட்சம் பேர் எழுதினர். ஆனால், நேற்று நடந்த, 5,566 இடங்களுக்கான, குரூப்-4 தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இந்தாண்டு தேர்வு விகிதம் இரு மடங்கு உயர்ந்து உள்ளது. தேர்வுக்கான, "கீ-ஆன்சர்&' இன்றோ அல்லது நாளையோ தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும்.
               குரூப்-4 தேர்வு குறித்த விவரங்களை, தேர்வர்களுக்கு, உடனுக்குடன் கொண்டு செல்வதில், செய்தித்தாளும், டிவி மீடியாக்களும் பெரும் பங்காற்றின. அதிலும், தினமலர் நாளிதழின் பங்கு அளப்பரியது. குரூப் - 4 தேர்வின் அனைத்து தகவல்களையும், உடனுக்குடன், தேர்வர்களுக்கு கொண்டு சென்றதில் தினமலர் முக்கிய பங்கு வகித்தது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive