NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

“சர்வதேச அளவில் ஆடிட்டிங் துறையில் சாதனை புரியலாம்”


         "சிமா" எனப்படும் "சார்ட்டர்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் அக்கவுன்ட்டிங்" கல்வி நிறுவனம் சர்வதேச அளவில் ஆடிட்டிங் பயிற்சிகளை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் கிளைகள் ஆரம்பிக்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
         இது குறித்து "சிமா" வின் தலைமைப் பிரதிநிதி ஆரதி பொர்வால் கூறியதாவது:
         இங்கிலாந்தில் ஆரம்பிக்கப்பட்ட சிமா நிறுவனம் 90 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறது. உலகம் முழுவதும் 170 நாடுகளுக்கும் மேலாக பயிற்சி மையங்களை அமைத்து நிர்வாக கணக்காளர் பயிற்சியினை வழங்கி வருகிறது.
          சர்வதேச தொழில்வல்லுனர்களின் உதவியுடன் தற்போதைய தேவைகளுக்கேற்ப பாடத்திட்டங்களை அமைத்து மாணவர்களை திறம்பட உருவாக்கி வருகிறோம். எங்களது பாடத்திட்டங்கள் பிளஸ் 2 முடித்து வருபவர்களுக்கு 4 கட்டங்களாகவும், இளநிலை படிப்பை முடித்தவர்களுக்கு 2 கட்டங்களாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
           "சிமா"வின் மேனேஜ்மென்ட் அக்கவுன்டிங் பயிற்சி முடித்த பலர் உலக வங்கி, சிங்கப்பூர் அரசாங்கம், இங்கிலாந்து அரசாங்க பணிகளில் உள்ளனர். இந்தியாவிலும் பல கல்லூரிகளுடன் இணைந்து பாடத்திட்டங்களை வழங்கி வருகிறோம். தமிழகத்தில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி, பிரைம் அகடமி போன்றவற்றுடன் இணைந்து பயிற்சி அளித்து வருகிறோம். 
             "சிமா"வின் சிறப்பம்சம் என்னவென்றால், ஓவ்வோரு நாட்டில் உள்ள கல்வி நிலையங்களும், அவர்கள் நாட்டிற்கு ஏற்றவாறு ஆடிட்டிங் பயிற்சிகளை வழங்குகிறது. ஆனால் "சிமா"வில் உலகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் வேலை பார்க்கக்கூடிய வகையில் ஓரே பாடத்திட்டத்தை, அனைத்து நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் வழங்குகிறோம்." என்றார்.
              மேலும் "சிமா"வின் விபரங்களை அறிய www.cimaglobal.com என்ற இணையதளத்தை காணலாம் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive