Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் - சிபிஎஸ்இ புதிய அறிவிப்பு

hindutamil-prod%2F2026-05-18%2Fvma55j5y%2F11 
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் பிரச்சினை மற்றும் மறுமதிப்பீட்டுக்கு ஜூன் 6-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

இது தொடர்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட செய்திக் குறிப்பு: 12-ம் வகுப்பு விடைத்தாள் பிரச்சினைகள் (விடைத்தாளில் பக்கங்கள் மற்றும் கூடுதல் விடைத்தாள், வரைபடம், கிராப்ஸ் காணாமல் போயிருப்பது) மற்றும் மறுமதிப்பீட்டுக்குக்கான ஆன்லைன் விண்ணப்பப்பதிவு (https://www.cbse.gov.in/) ஜூன் 2-ம் தேதி தொடங்கியுள்ளது. விடைத்தாளில் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புவோர், அனைத்து பிரச்சினைக்கும் ஒரேயொரு விண்ணப்பம் போதுமானது.

இந்த வசதியை விடைத்தாள் நகல் பெற்ற மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். விடைத்தாள் பிரச்சினைக்கு ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.100. மறுமதிப்பீட்டுக்கு கட்டணம் ரூ.25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உரிய கட்டணத்தை யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட்பேங்கிங் மூலம் ஆன்லைனி்ல் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 6-ம் தேதி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive