Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 24.06.26

 

கவிஞர் கண்ணதாசன்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:436

குறள்:

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு.

பொருள்:

முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது.

பழமொழி :

A good reputation is a fair estate

நற்குணமே சிறந்த சொத்து

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

 2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.

பொன்மொழி : 

கனவு என்பது நீங்கள் தூங்கும்போது காண்பது அல்ல; உங்களைத் தூங்கவிடாமல் செய்வதே உண்மையான கனவு." டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம்

Thought for the Day :

Dream is not what you see in sleep; dream is something that does not let you sleep."

பொது அறிவு : 

1. தமிழ்நாட்டின் முதல் இருண்ட வான் பூங்கா (Dark sky park) எங்கு தொடங்கப்பட்டுள்ளது? 

கொல்லிமலை. 

2. இளம்பிள்ளை வாதம் நோய் தாக்கும் உடல் உறுப்பு எது? 

மூளை மற்றும் குடல்.

English words :

1. nearby - close ,அருகில். 

2. guard - watchman ,காவலன்.

புவியியலும் சுற்றுசூழலும் :

ஆசியா – உலகின் மிகப் பெரிய மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட கண்டம். �
Encyclopedia Britannica +1
🔹 ஆப்பிரிக்கா – உலகின் இரண்டாவது பெரிய கண்டம்; பல்வேறு விலங்குகளின் வாழிடமாகும்.

NMMS :

SAT - SCIENCE: 

ஒரு பொருளின் அடிப்பரப்பினை அதிகரிக்கும்பொழுது எது அதிகரிக்கிறது?? 

(1)ஈர்ப்பு மையம்

 (2) சமநிலை 

(3) உறுதியற்ற சமநிலை 

(4) நடுநிலைச் சமநிலை 

விடை : (2) சமநிலை

ஜூன் 24

கண்ணதாசன் அவர்களின் பிறந்நாள்


கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சேரமான் காதலி  என்ற நூலுக்காக சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.

நீதிக்கதை

 ஒரு பருக்கையின் மதிப்பு

பனையூர் என்ற கிராமத்தில் கங்கா,கௌரி என்ற இரு சகோதரிகள் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தினமும் சாப்பிடும்போது தட்டில் நிறைய உணவை மீதம் வைத்து வீணாக்குவார்கள். எவ்வளவு முறை அம்மா கண்டித்தாலும் அவர்கள் மாறுவதாக இல்லை.

ஒருநாள் அவர்களுடைய தாத்தா அவர்களை வயலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு விவசாயிகள் கடும் வெயிலிலும் வியர்வை சிந்தி நெல் பயிரிடுவதை  பார்த்தார்கள்.

தாத்தா ஒரு நெல் மணியை கையில் எடுத்து, “இந்த ஒரு நெல் மணியை உருவாக்க எவ்வளவு உழைப்பு தேவை தெரியுமா? விவசாயியின் வியர்வை, மழை, மண், சூரியன்—இவை அனைத்தும் சேர்ந்து தான் ஒரு பருக்கை அரிசி கிடைக்கிறது” என்றார்.

அன்று மாலை வீட்டிற்கு வந்த அவர்கள் வழக்கம்போல் சாப்பிட அமர்ந்தார்கள். தட்டில் இருந்த ஒவ்வொரு பருக்கையையும் பார்த்தபோது விவசாயிகளின் உழைப்பு நினைவுக்கு வந்தது. அவர்கள் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொண்டு, தட்டில் எதையும் மீதம் வைக்காமல் சாப்பிட்டனர்.

அதன் பிறகு அவர்கள் மட்டும் அல்லாமல், தங்கள் நண்பர்களிடமும் உணவை வீணாக்கக் கூடாது என்று சொல்லத் தொடங்கினர்.

நீதி: உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் பலரின் உழைப்பு இருக்கிறது. எனவே உணவை ஒருபோதும் வீணாக்கக்கூடாது.

இன்றைய செய்திகள்

24.06.2026

🗒️2025ம் ஆண்டின் சிறந்த தமிழ் நூல்களுக்கு தமிழ்நாடு அரசு பரிசு: எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்
சிறந்த தமிழ் நூல்களுக்குப் பரிசு திட்டம் வழங்கப்படும் .

🗒️பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் ஜூலை 1-ந்தேதி வெளியிடப்படும் - உயர்கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு.

🗒️தமிழகத்துக்கு 40 டிஎம்சி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு.

🗒️ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி அடுத்த மாதம் இந்தியா வருகை.

 விளையாட்டுச் செய்திகள் 
🏀உலகக்கோப்பை கால்பந்து தொடர்: 'ஐ' பிரிவு பட்டியலில் முதல் இடம் பிடித்த பிரான்ஸ்.

Today's Headlines

🗒️ The Government of Tamil Nadu has announced awards for the best Tamil books of 2025. Writers can apply for the Best Tamil Books Award Scheme.

🗒️ The rank list for engineering admissions will be released on July 1, according to the Higher Education Minister.

🗒️ The Cauvery Water Management Authority has directed Karnataka to release 40 TMC of water to Tamil Nadu.

🗒️ Japan's Prime Minister, Sanae Takaichi, will visit India next month.

Sports News

🏀 FIFA World Cup: France secured the top position in Group I'.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive