Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.06.2026

லியாண்டர் பயஸ் 


       




திருக்குறள்: 

அதிகாரம்:43.அறிவுடைமை

குறள் எண்:430

குறள்:

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.   

பொருள்:

    ஏதும் இல்லாதவரானாலும் அறிவுடையார் எல்லாவற்றையும் உடையவரே; எதைப் பெற்றவராய் இருந்தாலும், அறிவு இல்லாதவர் ஏதும் இல்லாதவரே.  

பழமொழி :

"LDelay of justice is injustice.

தாமதிக்கப்பட்ட நீதி அநீதிக்குச் சமமாகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"கற்றல் என்பது வாழ்நாள் முழுவதும் தொடரும் பயணம்."

Thought for the Day :

"Education is not just about earning a living, but about learning how to live."

பொது அறிவு : 

1. இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருது எது?  

ஞானபீட விருது.  

2. 2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது யாருக்கு வழங்கப்பட்டது? 

கவிஞர் ஆர்.  வைரமுத்து.

English words :

Acquire – Obtain, பெறு.

Expand – Enlarge, விரிவாக்கு.

NMMS :

பின்வருவனவற்றுள் எது சரி??         

 (1) 0.01=1%                   

  (2) 0.1=1%              

 (3) 0.01 >1%                        

 (4) 0.01 <1%             

Percent means "per hundred."

1%=1100=0.01

So:

  • 0.01 = 1% ✅
  • 0.1 = 1% ❌ (0.1 = 10%)
  • 0.01 > 1% ❌ (they are equal)
  • 0.01 < 1% ❌ (they are equal)

Answer: (1) 0.01 = 1% ✅

      

விடை: 0.01=1%

புவியியலும் சுற்றுசூழலும் :

"நீர் இருந்தால் உயிர் இருக்கும்.""எனவே நீர் வளம் பெருக ""மரம் நடுவோம்; பூமியைக் காப்போம்."

ஜூன் 17

லியாண்டர் பயஸ் அவர்களின் பிறந்தநாள்

லியாண்டர் பயஸ் (Bengali: লিয়েন্ডার পেজ) (பி. ஜூன் 17, 1973) புகழ்பெற்ற இந்திய டென்னிஸ் வீரர் ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். லியாண்டர் பயஸ் கோவாவில் பிறந்து கொல்கத்தாவில் வளர்ந்தவர். இவரது தாயாரான ஜெனிபர் பயஸ் பிரபலமான கூடைப்பந்து வீரரவார். 1980 ஆசியக் கூடைப்பந்துப் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர். இவரது தந்தையான வெஸ் பயஸ் 1972 ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி (ஹொக்கி) அணியில் விளையாடியவர்.

நீதிக்கதை

 நேர்மையான சிறுவன் 

ஒரு கிராமத்தில் அருண் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவன் எப்போதும் உண்மையே பேசுவான்.

ஒருநாள் பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, சாலையில் ஒரு பணப்பையை கண்டான். அதில் நிறைய பணமும் சில முக்கிய ஆவணங்களும் இருந்தன.

அருண் அந்தப் பணப்பையை எடுத்துக்கொண்டு, அதில் இருந்த முகவரியைப் பார்த்து அதன் உரிமையாளரின் வீட்டிற்குச் சென்றான்.

பணப்பையை இழந்தவர் மிகவும் கவலையில் இருந்தார். அருண் பணப்பையை ஒப்படைத்தவுடன் அவர் மகிழ்ச்சியடைந்து,

"மகனே! இதில் இருந்த பணத்தில் சிறிது உனக்குப் பரிசாக எடுத்துக்கொள்," என்றார்.

அதற்கு அருண், "இல்லை ஐயா. இது உங்கள் பொருள். நான் செய்ய வேண்டிய கடமையை மட்டுமே செய்தேன்," என்றான்.

அருணின் நேர்மையைப் பார்த்து அந்த மனிதர் மிகவும் பாராட்டினார். இந்தச் செய்தி கிராமம் முழுவதும் பரவியது. அனைவரும் அருணை மதிக்கத் தொடங்கினர்.

நீதி:

நேர்மை என்பது பணத்தால் வாங்க முடியாத உயர்ந்த பண்பு. உண்மை பேசுபவரும் நேர்மையாக நடப்பவரும் அனைவரின் மதிப்பையும் பெறுவார்கள். 

பொன்மொழி: "நேர்மை சிறந்த செல்வம்."

இன்றைய செய்திகள்

17.06.2026

🗒️தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை  -தமிழக அரசு சார்பில் தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் தலைமைச் செயலகத்தில் வெளியிட்டார்.

🗒️ மருத்துவரின்  பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து வாங்க முடியாது,என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது .

🗒️மேற்காசியப் போரை முடிவுக்கு கொண்டுவரும் அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம், ஜூன்.19ம் தேதியன்று சுவிட்சர்லாந்தில் கையெழுத்தாக உள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


 *விளையாட்டுச் செய்திகள்*

🏀 நேஷன்ஸ் கோப்பை ஆக்கி - ஜப்பானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய மகளிர் அணி.

🏀குயின்ஸ் கிளப் டென்னிஸ்: 
லண்டனில் நடக்கும் குயின்ஸ் கிளப் டென்னிஸ் தொடர்  போட்டியில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி.

Today's Headlines

🗒️ Tamil Nadu Financial Status Report – On behalf of the Tamil Nadu Government, Finance Minister Mari Wilson released a White Paper on the financial status of Tamil Nadu at the State Secretariat.

🗒️ No More Cough Medicine Without Prescription – The Central Government has announced that cough medicines can no longer be purchased without a doctor's prescription.

🗒️ The country's Home Ministry has announced that the peace agreement between the United States and Iran, aimed at ending the conflict in West Asia, is set to be signed in Switzerland on June 19.

Sports News

🏀 Nations Cup Hockey – The Indian Women's Hockey Team advanced to the semifinals after defeating Japan.

🎾 Queen's Club Tennis – At the Queen's Club Tennis Championships in London, the pair led by Yuki Bhambri secured a victory.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive