Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி ஜூலை 6-இல் தொடக்கம்!


 தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழித் திறன் பயிற்சி ஜூலை 6-ஆம் தேதி முதல் நடை பெறவுள்ளது.
இதுகுறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் அரசுப் பள்ளிக ளில் பயிலும் மாணவர்களின் கற் றலை மேம்படுத்தும் நோக்கில் ஆசிரியர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுதவிர தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் சார்பிலும் ஆசி ரியர்களுக்கு திறன்சார் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

அதன்படி அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு பெங்களூரில் உள்ள தென்னிந் திய மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலம் ஆங் கிலம் கற்பித்தல் குறித்த பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பு ஜூலை 6 முதல் 17-ஆம் தேதி வரை யிலும், ஜூலை 20 முதல் 31-ஆம் தேதி வரையிலும் என இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

பயிற்சிக்குத் தேர்வு செய்யப் பட்ட ஆங்கில ஆசிரியர்களின் விவரங்களை அதற்கான படி வத்தில் பூர்த்தி செய்து தொடக்கக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

80 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

80 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Padasalai Youtube Subscribe Us

Total Pageviews

Blog Archive