Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த உயர்நீதிமன்றம் பரிந்துரை

 
ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த உயர்நீதிமன்றம் பரிந்துரை

பேராசிரியர்களின் ஓய்வு வயதை 65 ஆக உயர்த்த பரிசீலிக்க வேண்டும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு 

பேராசிரியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை எட்டு வாரத்திற்குள் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் பல ஆண்டுகளாக சீரான இடைவெளியில் உதவி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. மாநிலத்தின் பல பல்கலைக்கழகங்களிலும் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன . இதனால் மாணவர்களின் உயர்கல்வி , ஆராய்ச்சி மற்றும் கல்வித் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயம் செய்துள்ள குறைந்தபட்ச ஆசிரியர்கள் கூட பல கல்வி நிலையங்களில இல்லை. தற்போது பணியில் உள்ள பல பேராசிரியர்கள் இன்னும் சில ஆண்டுகளில் பணி ஓய்வு பெற உள்ளனர். இதனால் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பற்றாக்குறை மேலும் தீவிரம் அடையும்.

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த 2007 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழுவுக்கு அனுப்பியுள்ள பரிந்துரைப்படி, பல மாநிலங்கள் பல்கலைக்கழக ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 65 ஆக உயர்த்தியுள்ளனர். தமிழ்நாட்டில் ஓய்வு பெறும் வயது உயர்த்தப்படவில்லை. எனவே தமிழ்நாட்டிலும் பல்கலைக்கழக பேராசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 65 ஆக உயர்த்த கோரி கடந்த ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி தமிழ்நாடு அரசுக்கு மனு  மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. 

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா அவர்கள் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் தாட்சாயினி அவர்களும், அரசு தரப்பில் வழக்கறிஞர் கே.சதீஷ் அவர்களும் ஆஜராகி வாதிட்டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரர்கள் எழுப்பியுள்ள கோரிக்கை பரிசீலனைக்குரியதாகவே உள்ளது. எனவே பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களின் ஓய்வு வயதை 60 லிருந்து 65 ஆக உயர்த்த கோரும் மனுதாரரின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு 8 வாரங்களுக்குள் பரிசீலித்து சட்டப்படி தகுந்த முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive