Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.06.2026

மாக்சிம் கார்க்கி





திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:431

குறள்: 

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 

பொருள்:

  செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும் . பொருட்பால்

பழமொழி :

Diamond cuts diamond

முள்ளை முள்ளால் எடு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.

2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.

பொன்மொழி : 

"புத்தகங்கள் அறிவின் பொக்கிஷப் பெட்டகங்கள்."

Thought for the Day :

Knowledge is a treasure that no one can take away from you.

பொது அறிவு : 

1. உலக சிட்டுக்குருவிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது? .

மார்ச் 20.  

2. 133 அடியில் கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட ஆண்டு எது? 

2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

English words :

Maintain – Preserve, பராமரி.

Conclude – Finish, முடிவுக்கு வா.

NMMS :

ஒரு வட்டத்தின் ஆரம் இருமடங்கானால் அதன் பரப்பு எத்தனை மடங்காகும்??                

விடை : நான்கு மடங்காகும்                          

புவியியலும் சுற்றுசூழலும் :

அரசியலமைப்பு சட்டம் என்பது ஒரு நாட்டின் மிக உயர்ந்த சட்டமாகும். ஒரு நாட்டை எவ்வாறு ஆட்சி செய்ய வேண்டும், அரசாங்கத்தின் அதிகாரங்கள் என்ன, மக்களின் உரிமைகள் என்ன என்பவற்றை நிர்ணயிக்கும் அடிப்படை சட்டமே அரசியலமைப்பு ஆகும். 

ஜூன் 18

மாக்சிம் கார்க்கி அவர்களின் நினைவுநாள்

மாக்சிம் கார்க்கி (Maxim Gorky) என அறியப்படும் அலெக்சி மாக்சிகொவிச் பெசுகோவ் (உருசியம்Алексе́й Макси́мович Пешко́в; 28 மார்ச் [யூ.நா. 16 மார்ச்] 1868 – 18 சூன் 1936) உருசியா நாட்டை சேர்ந்த பிரபல எழுத்தாளர் மற்றும் அரசியல்வாதி. இவர் உலகின் மிகச் சிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படும் தாய் என்ற புதினத்தை எழுதினார்.

1898-ல் ‘ஸ்கெட்சஸ் அண்ட் ஸ்டோரீஸ்’ வெளிவந்தது. 1899-ல் முதல் நாவலும், 1902-ல் ‘தி லோயர் டெப்த்ஸ்’ என்ற நாடகமும் வெளிவந்தன. இவரது உலகப் புகழ்பெற்ற ‘மதர்’ (தாய்) புதினம் 1906-ல் வெளிவந்தது. 1906ஆம் ஆண்டு டிசம்பரில் நியூயார்க்கிலிருந்து வெளியாகும் 'ஆப்பிள்டன்' இதழில் தாய் முதற்பகுதியின் முன்பாகமும் 1907ஆம் ஆண்டு தாய் முழுவதும் வெளிவந்தன. இந்நூல் முதலில் வெளிவந்தது அமெரிக்காவில்தான். கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்களைக் கிளர்ந்தெழச் செய்வது, அதிகார வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுப்பது, வீரம் ஆகியவை இவரது எழுத்துகளின் அடிநாதமாகத் திகழ்ந்தன. இதனால் அரசின் கோபத்துக்கு ஆளானார். பலமுறை கைது செய்யப்பட்டார். இவரது படைப்புகள் கடும் தணிக்கையை எதிர்கொண்டன.

பல கவிதைகள் எழுதினார். ஏராளமான நூல்களைப் படித்தார். அபார நினைவாற்றல் படைத்தவர். எழுதுவதற்கு பென்சில்களையே பயன்படுத்தினார். சிறிய சிற்பங்கள் மீது அலாதி பிரியம் கொண்டவர்.

பாட்டாளி வர்க்க இலக்கியத்தின் பிதாமகர் என்று போற்றப்பட்டார். இவர் படைத்த தாய் (புதினம்) ’ (மதர்) நாவல், இன்றுவரை புரட்சிகரத் தொழிலாளி வர்க்கத்துக்கு ஊக்கமும் உற்சாகமும் தந்து வீரத்தை ஊட்டிவருகிறது. இது 200 முறைக்கு மேல் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கக்கன் அவர்களின் பிறந்தநாள்

திரு. கக்கன்


பி. கக்கன் (P. Kakkan, 18 சூன் 1908 – 23 திசம்பர் 1981), விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதர பல பொறுப்புகளை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்த, அரசியல்வாதி ஆவார். 

நீதிக்கதை

ஒரு காட்டில் ஒரு நரி வாழ்ந்து வந்தது. அது எப்போதும் எந்த வேலையையும் தாமதமாகச் செய்தது. உணவு தேடுவதற்குக் கூட நேரம் கழித்து கிளம்பும்.

அதே காட்டில் ஒரு அணில் இருந்தது. அது தினமும் அதிகாலையில் எழுந்து உணவைச் சேகரித்து வைத்துக்கொள்ளும்.

ஒருநாள் காட்டில் பலத்த மழை பெய்தது. எல்லா விலங்குகளும் தங்கள் இருப்பிடங்களில் இருந்தன. அணில் முன்பே சேகரித்த உணவை வைத்து நிம்மதியாக இருந்தது. ஆனால் நரி உணவு இல்லாமல் பசியால் தவித்தது.

அப்போது அணில், “நேரத்தை மதித்து வேலை செய்தால் எந்த கஷ்டமும் வராது” என்று கூறி, தன்னிடம் இருந்த உணவை நரியுடன் பகிர்ந்து கொண்டது.

அன்றிலிருந்து நரி தாமதத்தை விட்டுவிட்டு, நேரத்திற்கு வேலை செய்யத் தொடங்கியது.

நீதி: நேரத்தை மதிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள்.⏰🏆 🌟⭐⭐

இன்றைய செய்திகள்

18.06.2026

🗒️AI .ஆல் நேர்மை, ஒழுக்கத்தை கற்றுத் தர முடியாது - சென்னை ஐகோர்ட்டு கருத்து.

🗒️இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி கடந்த நிதியாண்டில் ரூ.1.78 லட்சம் கோடி - புதிய சாதனை. பாதுகாப்புத் துறை பெருமிதம் .

🗒️கச்சா எண்ணெய் விலை குறையும்: பிரதமர் மோடியுடனான சந்திப்பின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சு.

 *விளையாட்டு்ச் செய்திகள்* 

🏀உலகக் கோப்பை கால்பந்து: நியூசிலாந்து அணிக்காக விளையாடிய இந்தியர் 27 வயது சர்பிரீத் சிங் .

🏀 பெர்லின் ஓபன் டென்னிஸ்: கம்பேக் போட்டியில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி.

Today's Headlines


🗒️ AI cannot teach honesty and morality, observes the Madras High Court.

🗒️ India’s defence production reached ₹1.78 lakh crore in the last financial year, setting a new record, says the Defence Ministry.

🗒️ Crude oil prices will come down, said U.S. President Donald Trump during his meeting with Indian Prime Minister Narendra Modi.

Sports News

🏀 FIFA World Cup Football: 27-year-old Indian-origin player Sarpreet Singh represented the New Zealand national team.

🏀 Berlin Open Tennis: Serena Williams suffered a shock defeat in her comeback match.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive