Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நீட் தேர்வு முடிவு வெளியான பின் கால்நடை படிப்புக்கு கவுன்சலிங்: பல்கலை, துணைவேந்தர் தகவல்

hindutamil-prod%2F2026-06-26%2Fsc2zty6g%2F145212121 
நீட் தேர்வு முடிவு வெளி​யானதும் தமிழகத்​தில் கால்​நடை மருத்​து​வப் படிப்​புக்​கான கவுன்​சலிங் தொடங்​கும் என பல்​கலைக்​கழக துணை வேந்​தர் (பொ) நரேந்​திர​பாபு தெரி​வித்​தார்.

நாமக்​கல் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி மற்​றும்​ஆ​ராய்ச்சி நிலை​யத்​தில் அவர் மேலும் பேசி​ய​தாவது: கால்​நடை மருத்​துவ மாணவர்​கள் புதிய கண்​டு​பிடிப்​புகள் மற்​றும் ஆராய்ச்​சிகளில் அதிக ஈடு​பாடு கொண்​டு, கால்​நடைத் துறை​யின் வளர்ச்​சிக்கு பங்​களிக்க வேண்​டும். புதிய கண்​டு​பிடிப்​பு​களுக்​காக 16 திட்​டங்​கள் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்ளன. அதற்​கான நிதி உதவி​களை மாணவர்​கள் பயன்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

பல்​கலைகழகத்​தின்கீழ் செயல்​படும் கல்​லூரி​களில் பிவிஎஸ்சி கால்​நடை மருத்​து​வம் மற்​றும் மீன்​வளப் படிப்​பு​களுக்​காக 20 ஆயிரத்து 100 பேர் ஆன்​லைனில் விண்​ணப்​பித்​துள்​ளனர். நீட் தேர்வு முடிவு வெளி​யான பிறகு 660 கால்​நடை மருத்​து​வப் படிப்​புக்​கான இடங்​கள் மற்​றும் 100 பி.டெக். இடங்​களுக்​கான கலந்​தாய்வு தொடங்​கப்​படும்.

வெட்​னரி கவுன்​சிலின் அனு​மதி கிடைத்​தால் கூடு​தலாக 100 இடங்​கள் அதி​கரிக்க வாய்ப்​புள்​ளது. தனி​யார் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​கள் தொடங்க இது​வரை யாரும் விண்​ணப்​பிக்​க​வில்​லை. நாமக்​கல் கால்​நடை மருத்​து​வக் கல்​லூரி​யில் தோல் தொழிற்​சாலை அமைப்​ப​தற்​கான எந்த நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ளப்​பட​வில்​லை. இவ்வாறு கூறினார்.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive