 |
| ஆங் சான் சூச்சி |
திருக்குறள்:
பால் : பொருட்பால்
இயல் : அரசியல்
அதிகாரம்:44 குற்றங்கூறாமை
குறள் எண்:433
குறள்:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்
பொருள்:
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்.
பழமொழி :
Distance lends enchantment to the view
இக்கரைக்கு அக்கரை பச்சை.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. கோபப்படாமல் அமைதியாக பொறுமையோடு இருப்பேன்.
2. பிறரின் துன்பத்தை உணர்ந்து உதவுவேன். இதன் மூலம் இரக்க குணத்தை பிரதிபலிப்பேன்.
பொன்மொழி :
"கல்வி என்பது மதிப்பெண்களுக்காக மட்டும் அல்ல; நல்ல மனிதராக வாழ கற்றுத்தரும் ஒளிவிளக்கு."" 📚✨
Thought for the Day :
Every lesson learned is a step closer to your dreams.
பொது அறிவு :
1. செயற்கை நுண்ணறிவின் (AI) தந்தை என்று கருதப்படுபவர் யார்?
ஜான் மெக்கார்தி.
2. சதிஷ் தவான் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம் எது?
ஸ்ரீஹரிகோட்டா.
English words :
Determine – Decide, தீர்மானி.
Emphasize – Highlight, வலியுறுத்து
NMMS :
ஒரு முக்கோணத்தின் இரண்டு பக்கங்கள் 4 செ.மீ மற்றும் 5 செ.மீ எனில், அம்முக்கோணத்தின் மூன்றாவது பக்க அளவு என்ன?
(1) 3 செ.மீ (2) 1 செ.மீ
(3) 11 செ.மீ (4) 9 செ.மீ
விடை: (1) 3 செ.மீ
புவியியலும் சுற்றுசூழலும் :
இந்திய அரசியலமைப்பு 26 நவம்பர் 1949 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 26 ஜனவரி 1950 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த நாளே குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது.
ஜூன் 19
ஆங் சான் சூச்சி அவர்களின் பிறந்தநாள்
ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi, பிறப்பு: சூன் 19, 1945) என்பவர் மியான்மர் நாட்டைச் சேர்ந்த பெண் அரசியல்வாதியும் மக்களாட்சி ஆதரவாளரும் ஆவார். இவர் மியான்மரின் அரச ஆலோசகராக பதவி வகிக்கிறார். இவர் மக்களாட்சிக்கான தேசிய அமைப்பு என்ற கட்சியின் தலைவராக உள்ளார். தன் நாட்டில் மக்களாட்சியை ஏற்படுத்த அறவழிப் போராட்டத்தை நடத்தி வரும் இவர் தனது 21 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் 15 ஆண்டுகள் வீட்டுக்காவலில் கழித்தார். 1991 இல் அமைதிக்கான நோபல் பரிசினை ஆங்சான் சூச்சி பெற்றார்.
நீதிக்கதை
மரமும் காற்றும்
ஒரு ஆற்றங்கரையில் ஒரு பெரிய மரமும், சில நாணல் புற்களும் இருந்தன.
ஒரு நாள் பலத்த காற்று வீசியது. பெரிய மரம் காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல், "நான் எவ்வளவு வலிமையானவன்! என்னால் இந்த காற்றை எதிர்க்க முடியும்" என்று அகம்பாவத்துடன் கூறியது.
ஆனால், சிறிய நாணல் புற்கள் காற்று வீசும் திசைக்கேற்ப வளைந்து கொடுத்தன. காற்று நின்ற பிறகு, பெரிய மரம் புயலால் வேரோடு சாய்ந்து கிடந்தது. ஆனால், நாணல் புற்கள் எந்த சேதமும் இல்லாமல் நிமிர்ந்து நின்றன.
நீதி (Moral): வளைந்து கொடுக்கத் தெரிந்தவர்களே வாழ்வின் சோதனைகளை வெல்ல முடியும்; அகந்தை அழிவைத் தரும்.
இன்றைய செய்திகள்
19.06.2026
*தலைப்புச் செய்திகள்*
🗒️21-ம் தேதி நீட் மறு தேர்வு - வார நாட்கள் அட்டவணையில் ரெயில்கள் இயக்கப்படும் என இரயில்வே துறை அறிவிப்பு.
🗒️ஒருங்கிணைந்த கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை தாமதமின்றி மேற்கொள்ள அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
🗒️பழங்குடி மக்களின் வாழ்க்கை முறையில் உலக அமைதிக்கான வழி உள்ளது’ - மேதகு ஜனாதிபதி திரவுபதி முர்மு
தெரிவித்துள்ளார்.
🗒️அமேசானையே முந்திய ஸ்பேஸ் எக்ஸ்: உலகின் 5-வது பெரிய நிறுவனமாக சாதனை படைத்துள்ளது.
*விளையாட்டுச் செய்திகள்*
🏀மகளிர் தேசிய கோப்பைக்கான ஆக்கி போட்டி; உருகுவேவை வீழ்த்திய இந்தியா.
🏀 டி20 உலகக் கோப்பை...
ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி தொடரை வென்ற இந்தியா.
Today's Headlines
🗒️ NEET Re-Examination on June 21 – The Railway Department has announced that trains will operate according to the weekday schedule.
🗒️ The Directorate of Public Health has issued a circular to all District Health Officers directing them to carry out integrated mosquito control measures without delay.
🗒️ “There is a path to world peace in the way of life of tribal communities,” stated President Droupadi Murmu.
🗒️ SpaceX surpasses Amazon to become the world's 5th largest company.
Sports News
🏀 Women's National Cup Hockey Tournament: India defeated Uruguay.
🏀 T20 World Cup: India won the series by defeating Afghanistan.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...