Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.06.2026

 

மைக்கல் பெல்ப்ஸ்




திருக்குறள்: 

பால் : பொருட்பால்

இயல் : அரசியல்

அதிகாரம்:44 குற்றங்கூறாமை

குறள் எண்:439

குறள்:

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை.

பொருள்:

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களை ஒருபோதும் செய்ய விரும்புதலும் கூடாது.

பழமொழி :

A little learning is a dangerous thing.

அரை குறை படிப்பு ஆபத்தானது.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

சிறிய இலக்கு ஒரு குற்றம். பெரிய இலக்கை நோக்கிச் செல்லுங்கள்.”

Thought for the Day :

Dream, dream, dream. Dreams transform into thoughts, and thoughts result in action."

பொது அறிவு : 

1. ஆந்தை தனது கழுத்தை எத்தனை டிகிரி கோணத்தில் திருப்பும்? 

270 டிகிரி வரை.

 2. மனித உடலில் வலியை உணராத உறுப்பு எது? 

மூளை.

English words :

Eliminate – Remove, நீக்கு.

Facilitate – Make easier, எளிதாக்கு

புவியியலும் சுற்றுசூழலும் :

ஆஸ்திரேலியா – ஒரு நாடாகவும் ஒரு கண்டமாகவும் இருக்கும் உலகின் ஒரே கண்டம்.

NMMS :

SAT - Social Science

பாண்டியர்களின் துறைமுகங்களில் மிகவும் விறுவிறுப்பாக வணிகம் நடைபெற்ற துறைமுகம் _______________ .

 (1) காயல்பட்டினம் 

(2) கொற்கை 

(3) காவிரிப்பூம்பட்டினம் 

(4) உறையூர் 

விடை: (1) காயல்பட்டினம்

ஜூன் 30

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ்  அவர்களின் பிறந்த நாள்

மைக்கல் ஃப்ரெட் பெல்ப்ஸ் II (மைக்கல் பிரெட் பெல்ப்சு II) (Michael Fred Phelps II, பி ஜூன் 30, 1985, பால்ட்டிமோர், மேரிலன்ட்) பல நீச்சல் வகைகளில் உலக சாதனைகளைப் படைத்த அமெரிக்க நீச்சல் வீரர் ஆவார். 28 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களை பெற்ற ஃபெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் மிக அதிக தங்கப் பதக்கம் பெற்றவர் ஆவார்.

நீதிக்கதை

 "உழைப்பால் உயர்ந்த முருகன்"

 

ஒரு சிறிய கிராமத்தில் சதீஷ் என்ற கூலித் தொழிலாளி வாழ்ந்து வந்தான். தினமும் அதிகாலையில் எழுந்து கட்டிட வேலைக்குச் செல்வான். கிடைத்த கூலியில் குடும்பத்தை நடத்தி, சிறிது பணத்தைச் சேமிப்பான்.

பலர், "இவ்வளவு உழைத்தும் என்ன பயன்?" என்று கேலி செய்தார்கள். ஆனால் சதீஷ் மனம் தளரவில்லை. "உழைப்பு ஒருநாளும் வீண் போகாது," என்று நம்பினான்.

பல ஆண்டுகள் கடினமாக உழைத்து, சேமித்த பணத்தில் சிறிய கட்டுமான ஒப்பந்த வேலைகளைத் தொடங்கினான். நேர்மையாகவும், தரமாகவும் வேலை செய்ததால் மக்கள் அவனை நம்பத் தொடங்கினர்.

சில ஆண்டுகளில் அவன் பலருக்கு வேலை கொடுக்கும் பெரிய ஒப்பந்ததாரராக உயர்ந்தான். ஒருகாலத்தில் கூலித் தொழிலாளியாக இருந்த சதீஷ், இன்று பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறினான்.

ஒருநாள் அந்த ஊர் பள்ளியில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் அவன் கூறினான்:

"என்னை உயர்த்தியது அதிர்ஷ்டம் அல்ல; தினமும் செய்த நேர்மையான உழைப்புதான்." இதனைக் கேட்டு மாணவர்களும் உள்ளூர் மக்களும் பலமாக கைத்தட்டி பாராட்டினர்.

நீதி: உழைப்பும் விடாமுயற்சியும் இருந்தால், சாதாரண மனிதனும் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

இன்றைய செய்திகள்

30.06.2026

🗒️ மாணவர்கள் சிறார்கள் பாதுகாப்பில் முக்கிய பங்கு அளிக்க வேண்டும், முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தல்

🗒️ புதிய பாடத்திட்ட வடிவமைப்புக் குழு மங்கல்யான் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள்  தலைமையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

🗒️ஆந்திர பிரதேசத்தில் உள்ள 2 பல்கலைக்
கழகங்களின் பட்டமளிப்பு விழாக்களில் இன்று ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்கேற்க உள்ளார்.

 விளையாட்டுச் செய்திகள்

🏀9 தங்கம் உள்பட 26 பதக்கங்கள்... தேசிய சீனியர் தடகளத்தில் தமிழக அணி சாம்பியன். 109 புள்ளிகளுடன் தமிழக அணி முதலிடம் பிடித்துள்ளது.

🏀புரோ ஆக்கி லீக்: ஷூட்-அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா. லண்டனில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை வீழ்த்தியது.

Today's Headlines

🗒️ Chief Minister Joseph Vijay has urged students to play an important role in ensuring the safety and protection of children.

🗒️ The New Curriculum Design Committee has been reconstituted under the chairmanship of Mylswamy Annadurai, the renowned Mangalyaan scientist.

🗒️ President Droupadi Murmu will attend the convocation ceremonies of two universities in Andhra Pradesh on June 30 and July 1.

Sports News

🏀 Tamil Nadu emerged as the champions at the National Senior Athletics Championships, securing 26 medals, including 9 gold medals. The team finished first with 109 points.

🏀 Pro Hockey League: India defeated England in a shoot-out during the match played in London yesterday.

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive