
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலிப்போம் என த.வெ.க. அரசு உறுதியளித்த நிலையில் தற்போது TAPS தொடர்பான அரசாணை நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது என சிபிஎஸ் ஒழிப்பு இயக்க மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயராஜேஸ்வரன், பிரெடரிக் ஏங்கல்ஸ் , செல்வகுமார் கூறியுள்ளனர்.
அவர்களது அறிக்கை
தற்போதைய அரசு ஜூன் 15-ல் வெளியிட்டுள்ள டாப்ஸ் தொடர்பான அரசாணை, அரசு ஊழியர் ஆசிரியர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் காலத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த பரிசீலிப்போம் என த.வெ.க. உறுதியளித்தது. ஆனால் இந்த அரசாணை நம்பிக்கையை சீர்குலைக்கும் நடவடிக்கையாக உள்ளது.
2026 ஜனவரி 1க்கு முன்பு ஓய்வு பெற்று சிபிஎஸ் இல் தங்களது இறுதி பலன்களை பெற்றுக்கொண்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர்கள் குறித்து இந்த அரசனையில் எந்தவிதமான அறிவிப்பும் இல்லை. தேர்தல் வாக்குறுதியை புறக்கணித்து அதிகாரிகளின் ஆலோசனைகளை மட்டும் கேட்டு தமிழக அரசு செயல்படுமானால் அதன் விளைவுகள் அரசியல் ரீதியாக த.வெ.க. அரசிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும்.
20 லட்சம் குடும்பங்களின் எதிர்பார்ப்பும் கோரிக்கையும் பழைய ஓய்வூதிய திட்டமே. தமிழக அரசு உடனடியாக TAPS திட்டத்தை கைவிட்டு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். 2026 ஜனவரி 1க்கு முன், பின் ஓய்வு பெற்ற அனைவருக்கும் பொருந்தும் வகையில் முழுமையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...