Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 29.06.2026

 

iphone




திருக்குறள்: 

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:438

குறள்: 

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.  

பொருள்:

எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான் .

பழமொழி :

A hungry man is an angry man

பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1) ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஆக்கமுடன் செய்வேன் . 

2) முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் தொடர்ந்து முயற்சி செய்வேன்.

பொன்மொழி : 

கல்வியே மனிதனின் மிகப் பெரிய செல்வம். - காமராஜர்

Thought for the Day :

Education is the most powerful weapon which you can use to change the world - Nelson Mandela.

பொது அறிவு : 

1. ஒட்டகசிவிங்கியின் கழுத்தில் எத்தனை எலும்புகள் இருக்கும்?

ஏழு.

2. முன்னோக்கி மட்டுமே நடக்கக் கூடிய விலங்கு எது? 

கங்காரு.

English words :

Conceal – Hide, மறை.

Diminish – Reduce, குறை.

புவியியலும் சுற்றுசூழலும் :

அண்டார்டிகா – உலகின் மிகவும் குளிரான கண்டம்; நிரந்தர குடியிருப்புகள் இல்லை.

NMMS :

SAT - Social Science

இஇவற்றில் எது முதன்மைச் சான்று அல்ல???                         

(1) பொறிப்புகள்                      

(2) நினைவுச் சின்னங்கள்                   

(3) நாணயங்கள்                    

(4) இலக்கியங்கள்                  

விடை: (4) இலக்கியங்கள்

ஜூன் 29

2007 – ஆப்பிள் நிறுவனம் தனது முதல் ஐபோனை (iPhone) வெளியிட்டது. ஐபோன் ஸ்மார்ட்போன் துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியதுடன், ஒரு காலகட்டத்தில் ஆப்பிள் நிறுவனத்தை உலகின் மிக மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாகவும் மாற்றியது.

நீதிக்கதை

 "அரண்மனையின் காணாமல் போன கிரீடம்"

ஒரு பெரிய நாட்டை நீதிமான் அரசர் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அவரது அரண்மனையில் அனைவரும் நேர்மையாக வாழ வேண்டும் என்பது முக்கியமான விதியாக இருந்தது.

ஒருநாள், இளவரசரின் வெள்ளி கிரீடம் காணாமல் போனது. அரண்மனைமுழுவதும் தேடியும் கிடைக்கவில்லை . அரசர் யாரையும் உடனே குற்றம்சாட்டவில்லை .

சிறிது நேரத்தில், புதிய வேலைக்காரச் சிறுவன் ஒருவன் நடுங்கியபடி அரசரிடம் வந்து, "அரசே , அந்த கிரீடம் மிகவும் அழகாக இருந்ததால் சிறிது நே ரம் அணிந்து பார்க்க வேண்டும் என்று எடுத்தேன். பிறகு பயந்து மறைத்துவைத்துவிட்டே ன்.

என்னை மன்னித்துவிடுங்கள்," என்றான்.

அரசர் கோபப்படாமல், "தவறை ஒப்புக்க கொண்டது நல்லது. ஆனால் பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பதே திருட்டு. அது நம்பிக்கை யை உடைத்துவிடும். இனி இப்படிச் செய்யாதே ," என்று அறிவுரை கூறினார்.

சிறுவன் தனது தவறை உணர்ந்து, இனி வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருப்பதாக உறுதியளித்தான்.

நீதி: பிறருடைய பொருளை அனுமதி இல்லாமல் எடுப்பது தவறு. நேர்மையே மனிதனின் மிகப் பெரிய செல்வம்.

இன்றைய செய்திகள்

29.06.2026

🗒️மேகாலயாவின் 'வாழும் வேர் பாலங்களை' (Living Root Bridges) யுனெஸ்கோ (UNESCO) உலக பாரம்பரிய தளங்களின் பட்டியலில் சேர்க்க இந்தியா விண்ணப்பித்துள்ளது.

🗒️தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

🗒️பிரான்சில் வெப்ப அலை தீவிரம்; கடந்த ஆண்டை விட பலி எண்ணிக்கை அதிகரிக்கும் - அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்* 

🏀தேசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை.

🏀நீளம் தாண்டுதல் போட்டி - 22 ஆண்டுகால சாதனையை தகர்த்த கேரள வீராங்கனை

🏀சர்வதேச பாரா பேட்மிண்டன்: 6 பதக்கங்களை வென்று இந்திய அளவில் சாதனை படைத்த தமிழக வீராங்கனை துளசிமதி!


Today's Headlines

🗒️ India has nominated Meghalaya's Living Root Bridges for inclusion on the UNESCO World Heritage List.

🗒️ The world's first hydrogen production plant has been inaugurated at the Indira Gandhi Centre for Atomic Research in Kalpakkam, Tamil Nadu.

🗒️ Heatwave intensifies in France: Reports indicate that the death toll is expected to be higher than last year.

Sports News

🏀 National Athletics Championships: A Tamil Nadu athlete won the gold medal.

🏀 Long Jump: A Kerala athlete broke a 22-year-old record in the event.

🏀 International Para-Badminton: Thulasimathi, a player from Tamil Nadu, sets a national record by winning 6 medals!

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive