தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தனது உறுப்பினர்களுக்கான ஆன்லைன் சேவைகளை ஜூன் 26 முதல் ஜூன் 28 வரை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது .
தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் சிஸ்டம் மைக்ரேஷன் (System migration) காரணங்களால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது .
இந்த 3 நாட்களுக்கு பின்வரும் சேவைகள் பாதிக்கப்படும்:
- புதிய ஆன்லைன் கிளைம் (Claim) கோரிக்கைகளைச் சமர்ப்பிக்க முடியாது .நிலுவையில் உள்ள கிளைம்களைச் செயலாக்கும் பணிகள் நடைபெறாது .
- UMANG செயலி வழியாகப் பெறப்படும் EPFO சேவைகள் ஜூலை 2 வரை கிடைக்காது .
- ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட கிளைம்கள் சேவை மீண்டும் தொடங்கிய பின்னரே பரிசீலிக்கப்படும் .
சேவைகள் ஜூன் 29 முதல் வழக்கம் போல் முழுமையாகச் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த காலகட்டத்தில் அவசர உதவிக்கு உறுப்பினர்கள் 14470 என்ற எண்ணில் EPFO கால் சென்டரைத் தொடர்பு கொள்ளலாம் .







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...