Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்


தொழில்நுட்ப பிரச்சினையால் நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய முடியாமல் மாணவர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். தொழில்நுட்ப பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து மாணவர்களும் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வு ரத்து: மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நீட் (யுஜி) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்தது. வினாத்தாள் கசிந்ததால் அத்தேர்வு ரத்துசெய்யப்படுவதாகவும் மறு நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. இதைத்தொடர்ந்து நீட் மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட்டை மாணவர்கள் ஜூன் 15-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவித்தது.

நாடு முழுவதும்... அதன்படி, நீட் தேர்வு மாணவர்கள் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை நேற்று என்டிஏ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய முயன்றனர். ஆனால், இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மாணவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இணையதளத்தில் பக்கம் திறக்காதது, பதிவிறக்கம் செய்யும்போது பாதியில் நின்றுவிடுவது என பல்வேறு பிரச்சினைகளை நாடு முழுவதும் மாணவர்கள் எதிர்கொண்டனர்.

இதற்கிடையே, என்டிஏ வெளியிட்ட அறிவிப்பில், நாடு முழுவதும் இதுவரை 4 லட்சம் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும், விரைவில் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலா்ம் என உறுதியளித்துள்ளது.

மன உளைச்சல்: வினாத்தாள் கசிந்து தேர்வு ரத்து, மறுதேர்வு, அதற்கான ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல், மறு தேர்வு எழுதாதவர்களுக்கு கட்டணத்தை திருப்பி அளிப்பதில் பிரச்சினை என நீட் தேர்வு விவகாரத்தில் மாணவர்கள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive