Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள் பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்


பாலிடெக்னிக் டிப்ளமோ படித்து பணியில் இருப்பவர்கள், பகுதி நேர பிஇ படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் 6 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 2 அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில், நடப்பு கல்வி ஆண்டில் (2026-27) பகுதி நேர பிஇ படிப்பில் சேர ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பொறியியல் டிப்ளமோ படித்து வேலைவாய்ப்பு பெற்று ஓராண்டு பணிபுரிந்த அல்லது பணிபுரிந்து கொண்டிருப்போர் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர் ஆவர். அவர்கள் www.ptbe-tnea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.900. எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு ரூ.450 மட்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூலை 12-ம் தேதி. கூடுதல் விவரங்களை மேற்குறிப்பிட்ட இணைய தளத்தில் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive