Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிப்பு சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

              புதிதாக 128 தொடக்கப்பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 192 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் சட்டசபையில் நேற்று அறிவித்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் புதிதாக 1,682 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கலந்தாய்வுக்கு முன்பே 200 ஆசிரியர்கள் பணியிடமாறுதல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.

                  புதுச்சேரியில் ஆசிரியர் பணியிட மாறுதலில் முறைகேடு என ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள்புகார்.புதுச்சேரி சட்டமன்ற சபாநாயகர் சபாபதியிடம் என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மனு.
 

ஆக.,4ல் கல்வி அதிகாரிகள் கூட்டம்

                  சென்னையில் ஆக.,4ல் மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளின் நேர்முக உதவியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. பள்ளிகல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில், அத்துறை உயரதிகாரிகள், 32 மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளின்நேர்முக உதவியாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
 

சிறந்த ஆசிரியருக்கான விருது ஆக., 20க்குள் முடிக்க திட்டம்

            ராதாகிருஷ்ணன் விருதுக்கு, தகுதி வாய்ந்த ஆசிரியர் பட்டியலை, ஆக., 20ம் தேதிக்குள் இறுதி செய்ய, கல்வி துறை திட்டமிட்டுள்ளது. கற்றல், கற்பித்தலில் சிறந்து விளங்குதல், பள்ளி மேம்பாட்டிற்கான பங்களிப்பு உள்ளிட்ட, பல்வேறு அம்சங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, 'டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது' வழங்கப்படுகிறது.
 

தேர்வு குழப்பத்திற்கு விரைவில் தீர்வு'

           ராஜ்யசபாவில் நேற்று, மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியதாவது: மத்திய அரசு பணியாளர் தேர்வாணையமான, யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வு தொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
 

சமஸ்கிருத வாரம் கொண்டாடதடை கோரிய வழக்கு தள்ளுபடி.


       சிபிஎஸ்இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தில், வக்கீல் புகழேந்தி தாக்கல் செய்த வழக்கு:
 

ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

          தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் சார்பான இயக்குனரின் உத்தரவு

TRB Paper 2: இறுதி தேர்வுப் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம்

TRB பட்டதாரி ஆசிரியர் :தயார் நிலையில் இறுதி தேர்வுப் பட்டியல்


      பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

1.128 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும்
2. 50 அரசு நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.

1000 புதிய ஆசிரியர் பணி இடங்கள்-ரூ.72 கோடியில் கூடுதல் வகுப்பறைகள்: ஜெயலலிதா தகவல்

         சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறி இருப்பதாவது:–செல்வத்துள் பெரும் செல்வம் ஆகிய கல்வியை அனைவரும் கற்று, கல்லாதவர்களே இல்லாத மாநிலம் தமிழகம் என்ற குறிக்கோளை அடையும் வகையில் எனது தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது.இதன் அடிப்படையில், கீழ்க்காணும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப் பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.


PG TRB Court Case News:

       MADURAI BENCH OF MADRAS HIGH COURT :வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி

         வேலைவாய்ப்பக சீனியாரிட்டி அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் கோரிய மனு தள்ளுபடி  DETAILS OF JUDJEMENT

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

         கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. 
 

கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு

       கண்ணகி போல் நீதிகேட்டு வென்ற ஆசிரியை சங்கீதா!- நீதியரசர் நாகமுத்து அவர்களின் முழுத்தீர்ப்பு

பள்ளிகளை தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

         2014-15ம் கல்வியாண்டில் புதியதாக 128 தொடக்கப் பள்ளிகளும், 42 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 50 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தி முதல்வர் உத்தரவு

கும்பகோணம் தீ விபத்து | 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

          கும்பகோணம் தீ விபத்து வழக்கில் பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனை; 9 பேருக்கு சிறை; 11 பேர் விடுவிப்பு- தஞ்சை நீதிமன்றம் தீர்ப்பு

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் தங்கள் குழந்தைகளை இழந்த பெற்றோர். | கோப்புப் படம்         கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில், ஸ்ரீ கிருஷ்ணா பள்ளி நிறுவனர் புலவர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து, தஞ்சை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

           மேலும், அந்தப் பள்ளியின் தாளாளரும், பழனிச்சாமியின் மனைவியுமான சரஸ்வதி, தலைமை ஆசிரியர் சாந்தலெட்சுமி, சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையல்காரர் வசந்தி ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

காலிப் பணியிடங்களை நிரப்பாவிட்டால் சென்னையில் பேரணி

          உடற்கல்வி ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிறைவு செய்யவில்லை எனில், சென்னையில் பேரணி நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி துறை இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன ஆணை

            திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில், பள்ளிக்கல்வி துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு, கவுன்சலிங் மூலம் நியமன ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் டிஇஓ பதவி உயர்வு : 15 மாவட்ட கல்வி அலுவலர்களாக தலைமை ஆசிரியர்கள் நியமனம்

             தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு தாமதம் காரணமாக 15 மாவட்ட கல்வி அலுவலர் பதவிகளுக்கு தலைமை ஆசிரியர்களை கூடுதல் பொறுப்பாக நியமித்து பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களாக பணியாற்றிய 15 பேருக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களாக கடந்த 25ம் தேதி பதவி உயர்வு அளிக்கப்பட்டது. இவர்கள் உடனே புதிய பணியிடங்களில் சேரவும் பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டது.

10th Science Study Material ( Latest )

Science - Study Material

இந்த ஆண்டு 887 இடைநிலை ஆசிரியர்கள் நியமனம்

           தமிழக அரசு தகவல் இந்த ஆண்டு புதிதாக 887 இடைநிலை ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டில் 9,692 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இதன் காரணமாக, இப்போது இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் குறைவான காலிப் பணியிடங்களே உள்ளன.

ஆசிரியர் பயிற்றுனர்களை நியமிக்க வழக்கு : அதிகாரிகளுக்கு நோட்டீஸ்

           ஆசிரியர் பயிற்றுனர்களை பள்ளியில் நியமிப்பது தொடர்பாக, ஆசிரியர்தேர்வு வாரியம், பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்குத் தடை கோரி வழக்கு.

     885 வட்டார வளமைய ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி அமர்த்தாமல் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை நியமிக்கத் தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

TNTET : பட்டதாரி ஆசிரியர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியீடு?

               பட்டதாரி ஆசிரியர் இறுதி தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் ஓரிரு நாளில் வெளியிடவுள்ளது. பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசுபள்ளிகளில் 10,726 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


தமிழ் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை அதிகரிக்க வேண்டி கோரிக்கை

1.   தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகள் அனைத்தும் தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிக்க வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், நடுநிலைப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுவதில்லை.


பள்ளி பஸ்களுக்கு 'கிடுக்கிப்பிடி' : விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை

    பெங்களூரு நகரப் பள்ளிகளுக்கு, வழிகாட்டுதல் நெறிமுறைகளை நிர்ணயித்துள்ள போலீஸ் கமிஷனர், எம்.என்.ரெட்டி, பள்ளி பஸ்கள், வாகன டிரைவர்களுக்கு சீருடை, பேட்ஜ் அணிவதை கட்டாயமாக்கி உள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் : 8,000 போலீசார் முதல்வருக்கு கோரிக்கை

          கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், காவல் துறையில் சேர்ந்த, 8,000 காவலர்கள், தங்களை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும்' என, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தங்கம். தங்கம், தங்கம்; காமன்வெல்த் போட்டியில் 10 தங்கப்பதக்கங்களை அள்ளிய இந்தியா

          கிளாஸ்கோ: காமன்வெல்த் போட்டியில், மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு இன்று ஒரே நாளில் 3 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் சுஷில்குமார்,அமித்குமார், மற்றும் இந்திய வீராங்கனை வினேஸ் தங்கப்பதக்கம் வென்றனர். இதுவரை 36 தங்கப்பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

பள்ளி இடைநிற்றல் விகிதம் குறைந்தது உண்மையா?

            தமிழகத்தில், மாணவர்களின் இடைநிற்றல் (டிராப் அவுட்ஸ்) விகிதம் குறைந்து விட்டதாக, தமிழக அரசு தெரிவித்து உள்ளது.கல்வித் துறை புள்ளி விவரப்படி, 2001 - 02ல், தொடக்கநிலைவகுப்பில், மாணவர் இடைநிற்றல், 12 சதவீதமாக இருந்தது, 2013 - 14ல், 0.95 சதவீதமாக குறைந்துவிட்டது என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
 

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

          கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது.

நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த மெகா பட்ஜெட்டில் புது திட்டம்: அரசு பள்ளி மாணவியர் சாதனை

           நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்த, மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை கட்டாயப்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இது, மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை உணர, அரசு பள்ளி மாணவர்களுக்கு, சமீபத்தில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது.இதில், குளங்களை இணைத்து, ஒருங்கிணைந்த நீராதாரத்திற்கு வழிவகை செய்ய, மெகா பட்ஜெட்டில் திட்டம் தீட்டிய, ஒண்டிப்புதூர் அரசு பள்ளி மாணவியர், சவுமியா மற்றும் லதாவுக்கு, முதல் பரிசு கிடைத்தது.

பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

       சமூக நலம் - குழந்தைகள் நலம் - வீட்டை விட்டு வெளியே தங்கும் பெண் குழந்தைகள், வளர் இளம் பெண்கள் மற்றும் பெண்கள், சிறார் இல்லங்கள், பெண்கள் விடுதிகள் ஆகியவற்றில் உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுகாக வழிக்காட்டு நெறிமுறைகள் வழங்கி அரசு உத்தரவு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive