Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும்முறை எதிர்த்த மனு தள்ளுபடி.

         கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் மதிப்பெண் கணக்கிடும் முறையை எதிர்த்த மனு ஐகோர்ட்டில் தள்ளுபடியானது. மதுரையை சேர்ந்த மகாராஜன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களைநிரப்புவது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் 2008ல் அறிவிப்பு வெளியிட்டது. 
 
          இந்த தேர்வில் ஆசிரியர் அனுபவத்திற்கு 15 மதிப்பெண், பி.எச்டி., எம்.பில். படிப்புக்கு9 மதிப்பெண், ஆராய்ச்சி படிப்புக்கு 5 மதிப்பெண், நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண் என்று மொத்தம் 39 மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மதிப்பெண் கணக்கிடும் முறை சட்ட விரோதமானது. எனவே, இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்தார். '2008ம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிவிப்பு அடிப்படையில் கல்லூரி ஆசிரியர் நியமனங்கள் முடிந்து விட்டன. தற்போது, நியமன முறைகளை ரத்து செய்தால் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களை விசாரிக்காமல் எந்த முடிவும் எடுக்க முடியாது' என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
JUDGEMENT IN DETAIL
ORDER
The Teachers Recruitment Board, Government of Tamil Nadu issued
prospectus for Recruitment of Lecturers in Tamil Nadu Collegiate Educational
Service for Government Arts and Science Colleges - 2008. In the said
prospectus, the scheme of selection is dealt with in paragraph 11, which
states that for teaching experience, the candidates will be awarded maximum
of 15 marks, for Ph.D and M.Phil. with NET qualification a total of 9 marks,
for research contribution 5 marks and for interview 10 marks and thus the
maximum marks for selection is 39. The petitioner is aggrieved by the award
of 10 marks for interview. Therefore, the petitioner has come up with this
Writ Petition, challenging the said scheme of selection (vide paragraph 11
alone).

2. I have heard the learned counsel for the petitioner and the learned
Additional Government Pleader for the respondents and also perused the
records carefully.

3. It is the contention of the learned counsel for the petitioner that
the Hon'ble Supreme Court has held in a number of judgments that marks for
interview shall not exceed 25% of total number of marks. According to the
Hon'ble Supreme Court, prescribing more marks than 15% to interview leads to
arbitrariness. It is on this ground the petitioner has challenged the scheme
of selection.

4. This Writ Petition was admitted on 10.08.2009. But, there was no
interim order of stay or any other nature. It is now brought to the notice of
this Court that the Teachers Recruitment Board had completed the selection
process and the vacancies have been filled up. When that be so, at this
length of time, the challenge made in this Writ Petition cannot be examined.
Because, in the event, this Court found the Scheme of Selection is arbitrary,
it will disturb many candidates, who have undergone the selection process.
Further, those candidates, who have been selected and appointed are not
before this Court. Without hearing them, it is not possible for this court to
examine the matter as any decision taken in this Writ Petition may have
adverse impact on those candidates. In such view of the matter, the Writ
Petition deserves only to be dismissed.

5. In the result, the Writ Petition is dismissed. No costs.
Consequently, connected M.P.(MD) No.2 of 2009 is also dismissed.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive