Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சொல்வதை குறிப்பெடுக்க நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு

110வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:
 
           நடப்பு கல்வியாண்டில், 25 மாவட்டங்களில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அதிகம் உள்ள 128 குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு பகுதிகளில், தலா ஒரு தொடக்க பள்ளி வீதம் 128 புதிய தொடக்க பள்ளிகள் துவங்கப்படும். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஓர் இடைநிலை ஆசிரியர் என மொத்தம் 256 ஆசிரியர்கள் பணியமர்த்தப்படுவர்.
          நடப்பாண்டில் 19 மாவட்டங்களில் 42 தொடக்க பள்ளிகள் நடுநிலை பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்த பள்ளிக்கு 3 பட்டதாரி ஆசிரியர்கள் வீதம் 126 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
நடப்பு கல்வியாண்டில், 50 அரசு நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். இந்த பள்ளிகளில் 5 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 250 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் பணி நிரவல் மூலம் நிரப்பப்படும்.
நடப்பு கல்வியாண்டில் 100 அரசு, மாநகராட்சி மற்றும் நகராட்சி உயர்நிலை பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளாக நிலை உயர்த்தப்படும். பள்ளி ஒன்றுக்கு ஒரு தலைமை ஆசிரியர் பணியிடம் வீதம் 100 தலைமை ஆசிரியர் பணியிடங்கள், ஒன்பது முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் வீதம் 900 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவிக்கப்படும்.
வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ, வருவாய் இன்மை காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியை தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படும் சமயத்தில், அவர்களது குழந்தைகள் தங்களது கல்வியை தொடர்ந்து கல்வி கற்கும் வகையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ, மாணவிகள் ஒவ்வொருவருக்கும்
 INR50 ஆயிரம் நிதி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த தொகை இனி  INR75 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடங்களுக்கான செயல்முறை பயிற்சி ஏடுகள் வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் வழங்கும் முக்கிய குறிப்புகளை குறித்து வைத்து கொள்ளவும் முதன் முறையாக பள்ளி நாட்காட்டியுடன் இணைந்த குறிப்பேடு INR3 கோடி செலவில் நடப்பு கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive