Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கருகிய மலர்கள்!


        கருத்தாய் கற்பதற்கு கல்விநிலையம் சென்ற பிஞ்சுப்பூக்கள் 94பேர் கரிக்கட்டையாய் கிடந்த அவலநிலையெ கண்ட அத்தனை பேரின் மனதிலும்  அழியாத தழும்புகளாய் இருக்கின்றன...

        பணத்தை வசுல் செய்யும் பள்ளிகள் பாதுக்காப்பையும் உறுதிப்படுத்த வேன்டாமா? எந்த பாவமும் அறியாத பிஞ்சுகள் கதறித்துடிக்கும் போது கடவுளும் கல்நெஞ்சுக்காரனாய் இருந்து விட்டானே!!!!

          இவ்விபத்தில் தவறு செய்தவர்களுக்கான தீர்ப்பு நாளை வருகிறது.... நாடே எதிர்பார்க்கிறது நாமும் எதிர்பார்ப்போம்...

அதன் விவரம்:

           தஞ்சை 94 குழந்தைகள் உடல் கருகி இறந்த கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.  குற்றம்சாட்டப்பட்ட 21 பேரும் நாளை கோர்ட்டில் ஆஜராகின்றனர். தஞ்சை மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் ஸ்ரீகிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப்பள்ளி, சரஸ்வதி  மழலையர்பள்ளி, ஸ்ரீகிருஷ்ணா பெண்கள் உயர்நிலைப் பள்ளி ஆகிய 3 பள்ளிகளும் ஒரே கட்டிடத்தில் இயங்கியது. கடந்த 2004 ஜூலை 16ம் தேதி காலை பள்ளி முதல் தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். பலர் காயமடைந்தனர். தீவிபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில்  24 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அப்போது அனைவரும் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

             இந்த வழக்கு தொடர்பாக கும்பகோணம் கோர்ட்டில் 2005ல் குற்றப்பத்த¤ரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2006 மார்ச் 23ல் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் குற்றப்பத்திரிக்கையின் நகல் வழங்கப்பட்டு, விசாரணை தொடங்கியது. இதில் பள்ளி நிறுவனர் பழனிச்சாமியின் மருமகனும், பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியருமான பிரபாகரன் அப்ரூவர் ஆகி ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார். பின்னர் இவ்வழக்கு தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கிலிருந்து தொடக்க கல்வி இயக்குநர் கண்ணன், சிஇஓ முத்து.பழனிச்சாமி, தாசில்தார் பரமசிவம் ஆகியோரை ஐகோர்ட் விடுவித்தது. இவ்வழக்கில் 512 சாட்சியங்கள் சேர்க்கப்பட்டன. இவ்வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஜூலை 31க்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என கடந்த மே 5ம் தேதி சுப்ரீம் கோர்ட், உத்தரவிட்டது. இதையடுத்து இவ்வழக்கில் ஜூலை 30ம் தேதி(நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி முகமதுஅலி கடந்த 17ம் தேதி தெரிவித்தார். அதன்படி இவ்வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதையடுத்து இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 21 பேரும் நாளை காலை 10 மணிக்கு கோர்ட்டில் ஆஜராக உள்ளனர். நாளை தீர்ப்பு என்பதால் நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

‘பள்ளிகளுக்கு பாடமாக இருக்க வேண்டும்.
          தீ விபத்தில் குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் கூறுகையில் எங்கள் குழந்தைகள் இறந்த போது போன சந்தோஷம் இதுவரை திரும்பவில்லை. தீ விபத்துக்கு காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இந்த தீர்ப்பு உலக அளவில் பள்ளிகளை நடத்தும் நிர்வாகத்திற்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். காயமடைந்த பல குழந்தைகளின் தழும்பும் இன்னும் மறையவில்லை என்றனர்.


By P.Rajalingam..Puliangudi..
Tirunelveli
4 Comments:

 1. தன் பிள்ளைகளின் பாதுகாப்பான பள்ளியை தேர்ந்தெடுக்காத பெற்றோரும் "குற்றவாளியே".
  ஏன் அந்த அதிகாரிகளை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர் ??? மீண்டும் அவர்களையும் சேர்க்க (தவறு இருப்பின்) வேண்டும் ...
  இந்த வழக்கின் அடி முதல் தலை வரை பாரபட்சமற்ற முறையில் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் ..
  மேல் முறையீடு மூலம் மரணம் அடையும் இந்த குற்றவாளிகள் சுதந்திரமாக உலவ விட கூடாது ...
  அரபு நாடுகளை போன்று மிக மிக மிக கொடூரமான தண்டனை வழங்கினாலும் , அதுவும் மிக குறைவான தண்டனையே.......

  ReplyDelete
 2. 2004 நடந்த கொடுமைக்கு 2014ல் தான் தீர்ப்பா????அடக்கடவுளே.....
  புறாவிற்கு வந்த துன்பத்தை நீக்கிய சிபிச்சோழன் மற்றும் பசுங்கன்றுவை கொன்றதால் தன் மகனையும் கொன்ற மனுநீதி சோழன் பிறந்த தமிழகத்திலா நீதி தாமதமாக கிடைக்கிறது ஐயகோ????

  தவறு யாரின் மீது இருந்தாலும் அதிகபட்ச தண்டனையாகிய மரணதண்டனை கொடுத்தாலும் 94 உயிருக்கு ஈடாகாது......

  இது போன்ற சம்பவங்களை மிக வண்மையாக கண்டிக்கிறேன்....

  வரப்போகும் தீர்ப்பானது 94+12 பேரின் குடும்பங்களுக்கு ஆறுதல் மருந்தாக இருக்க வேண்டுமென ஆண்டவனை வேண்டுகிறேன்.......

  ReplyDelete
 3. காலதாமதமாக வழங்கும் தீர்ப்பும் அநீதிக்குச் சமமாகும்.இருப்பினும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கவேண்டும்.

  ReplyDelete
 4. Kuzhanthaiyin kalvi meethu akkarai kattinal kuzhanthaiyin meethu muzhumaiyana akkarai kattiyathaga arthama???? Pal(milk) manam vadatha kuzhanthaikum palliya.. petrorgal thanathu kuzhanthaigalai palliyil serpatharku munbu palliyin tharam amaipai parkka vendama.... Pala thoongalai thulaithu vittargale......

  ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -  பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

Blog Archive