நிரப்பப்படாத சிறப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களால் சிக்கல்

                   "தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்வி போதிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க மாநில தலைவர் ராஜ்குமார் மாநில முதல்வருக்கு அனுப்பிய மனு:
 
          கடந்தாண்டு, 16 ஆயிரத்து 548 பகுதி நேர சிறப்பாசிரியர்கள், மாதம் 5,000 ரூபாய் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு வாரம் 3 நாள் என்ற அடிப்படையில், ஒவ்வொரு நாளும் 3 மணி நேரம் மட்டுமே பணி வழங்கப்பட்டுள்ளது. "சட்டசபையில் நடந்து முடிந்த பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணி நிரந்தரம், அவர்களின் தொகுப்பூதியத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும்' என எதிர்பார்த்தோம்; ஆனால், எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
 
           கடந்த 2012-2013ம் ஆண்டு, அரசு அறிவித்த சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் 440 பேர், ஓவியம் 196, தையல் 137, இசை 9 பேர் என, மொத்தம் 782 பணியிடங்களுக்கு, ஆட் தேர்வு செய்யப்பட்டு, அவர்களது சான்றிதழ் சரிபார்ப்புப் பணியும் முடிக்கப்பட்டது. ஆனால், தேர்வு செய்யப்பட்ட நிரந்தர சிறப்பாசிரியர்களுக்கு இதுவரை பணி நியமனத்துக்கான உத்தரவு எதுவும் வரவில்லை. மாநில வேலை வாய்ப்பு அலுவலகத்தில் ஓவியம், தையல், இசை ஆசிரியப் பணியிடங்களுக்கான காத்திருப்போர் பட்டியலில், 17 ஆயிரத்து 500 பேருக்கு மேல் உள்ளனர். எனவே, சிறப்பாசிரியர் பணி நியமன விவகாரத்தில், மாநில அரசு முனைப்பு காட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம், அடுத்த மாதம் 5ம் தேதி, கோட்டை நோக்கி பேரணி நடத்தவுள்ளது; இதில், தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கமும் பங்கேற்பது என, முடிவெடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, ராஜ்குமார் கூறினார்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive