NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வானிலை முன்னறிவிப்பு: தமிழகம், புதுச்சேரியில் மழை வாய்ப்பு

      வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

காலை 8.30 மணிக்கு எடுக்கப்பட்ட மழை அளவின்படி, சின்னகல்லாரில் 4 செமீ, அறந்தாங்கியில் 3 செமீ, வால்பாறையில் 2 செமீ, காரைக்குடியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது. மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவின்படி, மதுரையில் 103.82, கடலூர், பரங்கிப்பேட்டையில் தலா 102.2, திருச்சியில் 102.02, புதுச்சேரியில் 101.84, பாளையங்கோட்டையில் 101.12, நாகப்பட்டினத்தில் 100.76, தூத்துக்குடியில் 100.58 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive