Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அப்துல்கலாம் மூலம் ராமேஸ்வரம் மேலும் புகழ் பெற்றுள்ளது : பிரதமர் மோடி புகழாரம் !!

        மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார்.       ராமேஸ்வரம் - அயோத்தி இடையேயான ரயில் சேவையை கொடி அசைத்து அவர் துவக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் நண்பர்களே வணக்கம் என கூறி தமிழில் பேச்சை துவக்கினார். பின்னர் அவர் இந்தியில் பேசியதை அவப்போது எச்.ராஜா மொழி பெயர்த்து தமிழில் தெரிவித்தார்.
பிரதமர் மோடிபேசியதாவது: இந்த புண்ணிய பூமியான ராமேஸ்வரத்திற்கு தாம் வந்திருப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். ராமேஸ்வரமானது பல்லாயிரம் ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு வழிகாட்டக் கூடிய புனித மையமாக உள்ளது. அது இப்போது நாட்டினுடைய பெரிய விஞ்ஞானி, மக்களிடையே மிக பிரபலமாக இருந்த சிந்தனையாளர், ஒரு மகான், ஜனாதிபதியாக இருந்தவரின் பெயரால் ராமேஸ்வரம் புகழ் பெற்றுள்ளதாக மாறியுள்ளது. இந்த புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தின் மண்ணினை தொடுவதை புண்ணியமாக கருதுவதாக தெரிவித்தார்.  ராமேஸ்வரம் ஒரு மதத்தினுடைய மையமாக மட்டும் இருக்கவில்லை. இது ஆன்மீக பூமியாக மக்களுக்கு தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.

இந்த புண்ணிய பூமியிலே சுவாமி விவேகானந்தர் அவர்கள், அவருடையை வெளிநாட்டு சுற்றுப் பயணம் முடித்து வந்து 1897-ல் இந்த புண்ணிய மண்ணில் கால் பதித்தார். இந்தியாவினுடைய மகத்தான மகான் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை நமக்கு தந்திருக்கிறது. ராமேஸ்வரம் மண்ணிலே பிறந்த அப்துல் கலாம், மிகவும் அமைதியான ஆழமான சிந்தனையாளராக இருந்திருக்கிறார். கலாம் அவர்கள் மறைந்த போது நான் ஒரு வாக்குறுதி தந்திருந்தேன். அவருடைய நினைவினை பறைசாற்றும் வகையில் பெரிய நினைவிடம் ஒன்று அமைக்கப்படும் என்றேன். மிக விரைவிலேயே அவருக்கான நினைவிடம் இங்கு அமைந்திருக்கிறது என்பதை பெருமிதத்தோடு கூறிக்கொள்கிறேன். DRDO மிக குறுகிய காலத்திலேயே கலாம் மணிமண்டபத்தை அமைத்திருக்கிறார்கள். நாடு முழுவதிலுமிருந்து வந்த பல தொழிலாளர்கள் கடுமையாக உழைத்து மணிமண்டபம் அமைக்க உதவியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தால் அயராது உழைத்த தொழிலாளர்களை வெகுவாக பாராட்டியிருப்பார் என்றார். ஜெயலலிதா நம்முடன் இல்லாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திற்கு வருகை தரும் மக்கள் கலாம் மணிமண்டபத்தை தவறாமல் பார்வையிட்டு செல்ல வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றார். ராமர் பிறந்த அயோத்தியுடன் ராமேஸ்வரத்தை இணைக்கும் வகையில் இன்று ரயில்வே சேவை துவக்கப்பட்டுள்ளது. ‘

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. எனவே தான் அவர்க-ளுக்கு தற்போது ஆழ்கடல் மீன்பிடி சாதனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மாற்றத்தை ஏற்படுத்தும் அரசாங்கம் டெல்லியில் அமைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்துள்ளார். மக்களின் பல ஆண்டு கனவான தனுஷ்கோடி சாலை இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பசுமை ராமேஸ்வரம் திட்டத்தால் இப்பகுதி மேலும் மேம்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive