மின்சாரத்திலிருந்தும் உணவு தயாரிக்கலாம்...விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

   பின்லாந்தில் உள்ள ஆராய்ச்சியாளர் குழு ஒன்று மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை பயன்படுத்தி புரோட்டின் கலந்த உணவைத் தயாரித்துள்ளது.


'அரிசியை வாட்ஸாப்பில் டவுன்லோட் செய்து கொள்ள முடியுமா?', 'உணவை இயந்திரத்தால் உற்பத்தி செய்து கொடுக்க முடியுமா' என்ற வாசகங்கள் விவசாயத்தின் அருமையை சொல்லிப் பெருமைப்பட வைத்தன. ஆனால், இப்போது அதையெல்லாம் உடைக்கும் விதமாகச் செயற்கையான முறையில் உண்ணும் உணவு தயாரிக்கப்பட்டுள்ளது. இதை பின்லாந்திலுள்ள ஆராய்ச்சிக் குழு நிகழ்த்திக் காட்டியுள்ளது. மின்சாரம் மற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடை உபயோகப்படுத்தி உணவைத் தயார் செய்திருக்கிறார்கள். மறுசுழற்சிக்கான ஆற்றலாக இருக்கும் சோலாரை உபயோகப்படுத்தி உணவில் புரோட்டீனை உற்பத்தி செய்து கொள்ளலாம்.
தயார் செய்யப்பட்ட உணவானது மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் கொடுக்கக் கூடிய வகையில் தயாராவது இதன் ஸ்பெஷல். முடிவாகக் கிடைத்த உணவில் 50 சதவிகிதம் புரோட்டீன், 25 சதவிகிதம் கார்போஹைட்ரேட் என சத்துக்களைக் கொண்டதாக உற்பத்தி செய்துள்ளது. இதற்கான மூலப்பொருட்கள் எல்லாம் காற்றில் இருந்து பெறப்படுகின்றன. எதிர்காலத்தில் இந்த உணவானது ஒரு மாற்று உணவாக இருக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த உணவைத் தயாரிக்கும் பணியில் பின்லாந்தின் வி.டீ.டி மற்றும் எல்.யூ.டி யுனிவர்சிட்டி ஆகியவை இணைந்து பணியாற்றுகிறது. உணவானது பூமியில் உற்பத்தி செய்யாவிட்டால் சுற்றுச்சூழல் சீர்குலைந்து விடும் என்பதும் அதே அறிவியலாளர்களின் கருத்துதான். இதில் எந்தக் கருத்து வெல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive