உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அந்த
பள்ளியின் பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தொடக்க கல்வி இயக்குனர் கார்மேகம் மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவு:
நடப்பு கல்வி ஆண்டில் 150 ஊராட்சி ஒன்றிய, நகராட்சி மற்றும் அரசு நடுநிலைப்
பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. தரம்
உயர்த்தப்பட்ட பள்ளிகளின் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்கள்,
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த
பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை தொடக்க பள்ளியாக மாறுவதால், தலா ஒரு
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வீதம் 150 தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்
பணியிடங்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர்கள், தரம்
உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்ற
விரும்பினால், அவரிடம் விருப்பக் கடிதம் பெற்று, பட்டதாரி ஆசிரியராக
பணியிறக்கம் செய்ய அனுமதிக்கலாம். மேலும், தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்
பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் விரும்பினால், தரம் உயர்த்தப்பட்ட
உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியராக அனுமதிக்கலாம். இப்பணிகளை ஆக.,3, 4
தேதிகளுக்குள் முடிக்குமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest Updates
10th, 11th, 12th Questions & Answers
Important Links!
Home »
» தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...