Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

TET தேர்வு முடிவு இணையதளத்தில் வெளியீடு

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களுக்கான போட்டி தேர்வு இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது.


29-ந்தேதி முதல் தாள் தேர்வும், 30-ந்தேதி 2-ம் தாள் தேர்வும் நடந்தது. முதல் தாள் தேர்வை 2 லட்சத்து 41 ஆயிரத்து 555 பேரும், 2-ம் தாள் தேர்வை 5 லட்சத்து 12 ஆயிரத்து 260 பேரும் எழுதினர். முதல் தாள் தேர்வு 598 மையங்களிலும், 2-ம் தாள் தேர்வு 1,263 மையங்களிலும் நடந்தது.

இந்த தேர்வுக்கான விடைத்தாளை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த மே மாதம் 22-ந்தேதி இணையதளத்தில் வெளியிட்டது. இந்தநிலையில் தகுதி தேர்வு முடிவு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in ல் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் வெளியிடப்பட்டது.

மேற்கண்ட தகவல் தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி எழுத்து தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுதுவதற்கு 2 லட்சத்து 18 ஆயிரத்து 491 பேர் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தின் 32 மாவட்டங்களில் உள்ள 601 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading