Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வரலாற்றில் இன்று ஜூலை 23

சூலை 23 (July 23) கிரிகோரியன்
ஆண்டின் 204 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 205 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 161 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்
811 – பைசாந்தியப் பேரரசர் முதலாம் நிக்கபோரசு பல்கேரியத் தலைநகர் பிளீசுக்காவை முற்றுகையிட்டு சூறையாடினார்.
1632 – புதிய பிரான்சில் குடியேறும் நோக்கில் முன்னூறு பிரெஞ்சுக் குடியேறிகள் பிரான்சின் தியப் நகரில் இருந்து புறப்பட்டனர்.
1793 – புருசியர்கள் இடாய்ச்சுலாந்தின் மாயின்சு நகரை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.
1813 – மால்ட்டா பிரித்தானியாவின் அரச குடியேற்ற நாடானது. சர் தோமசு மெயிற்லண்ட் அதன் முதலாவது ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
1829 – ஐக்கிய அமெரிக்காவில் வில்லியம் ஆஸ்டின் பேர்ட் என்பவர் "டைப்போகிராஃபர் என்ற முதலாவது தட்டச்சியந்திரத்தைக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
1840 – கனடா மாகாணம் என்ற பெயரில் பிரித்தானிய குடியேற்ற நாடு வட அமெரிக்காவில் அமைக்கப்பட்டது.
1874 – இலங்கையின் சட்டசபையின் தமிழ்ப் பிரதிநிதி முத்து குமாரசுவாமி இங்கிலாந்தில் சேர் பட்டம் அளித்துக் கௌரவிக்கப்பட்டார்.
1881 – சிலிக்கும் அர்கெந்தீனாவுக்கும் இடையில் எல்லை உடன்பாடு புவெனஸ் ஐரிஸ் நகரில் ஏற்படுத்தப்பட்டது.
1885 – அமெரிக்க அரசுத்தலைவர் யுலிசீஸ் கிராண்ட் தொண்டைப் புற்றுநோய் காரணமாக இறந்தார்.
1903 – போர்டு நிறுவனம் தனது முதலாவது தானுந்தை விற்றது.
1914 – ஆஸ்திரியாவின் முடிக்குரிய இளவரசர் பிரான்ஸ் பேர்டினண்ட்டின் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஆத்திரியா-அங்கேரி சேர்பியாவுக்கு காலக்கெடு விதித்தது. இதனை அடுத்து சூலை 28, 1914 இல் முதலாம் உலகப் போர் ஆரம்பமானது.
1921 – சீனப் பொதுவுடமைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
1927 – அனைத்திந்திய வானொலியின் முதலாவது வானொலி நிலையம் பம்பாய் நகரில் தனது ஒலிபரப்பு சேவையை ஆரம்பித்தது.
1929 – இத்தாலியில் பாசிச அரசு வெளிநாட்டுச் சொற்களைப் பயன்படுத்தத் தடை விதித்தது.
1942 – பெரும் இன அழிப்பு: போலந்தில் திரெப்ளிங்கா வதை முகாம் யூதர்களுக்காகத் திறக்கப்பட்டது.
1942 – பல்கேரியக் கவிஞரும், கம்யூனிசத் தலைவருமான நிக்கோலா வப்த்சாரொவ் சுட்டுக் கொல்லப்பட்டு மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.
1952 – 1952 எகிப்தியப் புரட்சி: எகிப்தின் பாரூக் மன்னரின் ஆட்சிக்கு எதிரான இயக்கத்தை ஜமால் அப்துல் நாசிரின் பின்னணியில் இராணுவத் தளபதி முகமது நாகிப் ஆரம்பித்தார்.
1961 – நிக்கராகுவாவில் சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி அமைக்கப்பட்டது.
1962 – லாவோஸ் நாட்டின் அரசியலில் வெளிநாடுகள் தலையிடாதிருக்க பன்னாட்டு ஒப்பந்தம் லாவோஸ் உட்பட 15 நாடுகளுக்கிடையில் ஜெனீவாவில் கைச்சாத்திடப்பட்டது.
1967 – அமெரிக்காவின் வரலாற்றில் மிகப் பெரும் கலவரம் ஆபிரிக்க அமெரிக்கர்கள் செறிந்து வாழும் டிட்ராயிட் நகரில் இடம்பெற்றது. 43 பேர் கொல்லப்பட்டு 342 பேர் காயமடைந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமான கட்டிடங்கள் எரிக்கப்பட்டன.
1968 – இசுரேலிய போயிங் 707 விமானம் 48 பேருடன் மூன்று பாலத்தீனத் தீவிரவாதிகளினால் கடத்தப்பட்டது. 40 நாட்களின் பின்னர் 16 அரபுப் போர்க் கைதிகளின் விடுவிப்புடன் கடத்தல் முடிவுக்கு வந்தது.
1970 – ஓமானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு, சுல்தான் சயீது பின் தைமூர் அவரது மகன் காபூசு இப்னு சஈத் ஆலு சஈத்தால் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1974 – கிரேக்க இராணுவ ஆட்சி கலைந்தது. கிரேக்கத்தின் முன்னாள் பிரதமர் கான்ஸ்தந்தீனசு கரமான்லிசு புதிய அரசை அமைக்க அழைக்கப்பட்டார்.
1980 – வியட்நாமைச் சேர்ந்த பாம் துவான் சோவியத்தின் சோயுஸ் 37 விண்கலத்தில் விண்ணுக்கு சென்ற முதலாவது ஆசியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1983 – திருநெல்வேலி தாக்குதல், 1983: விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தியதில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். புலிகளின் மூத்த உறுப்பினர் செல்லக்கிளி இத்தாக்குதலில் கொல்லப்பட்டார்.
1983 – கறுப்பு யூலை: இலங்கையில் இரண்டு வாரங்களில் 3000 தமிழர்கள் சிங்கள பௌத்த இனவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு ஆரம்பமானது.
1988 – பர்மாவில் இடம்பெற்ற மக்களாட்சிக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை அடுத்து 1962ம் ஆண்டில் இருந்து ஆட்சி நடத்திய இராணுவத் தளபதி நெ வின் பதவியைத் துறந்தார்.
1992 – அப்காசியா ஜோர்ஜியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – தற்பால்சேர்க்கையாளர்களின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் தீர்மானத்தை யோசப் ரட்சிங்கர் தலைமையிலான சிறப்புக் குழு வத்திக்கானில் முடிவெடுத்தது.
1995 – ஏல்-பாப் என்ற வால்வெள்ளி சூரியனுக்கு வெகு தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஓராண்டிற்குப் பின்னர் வானில் தெரிந்தது.
1999 – தோக்கியோ நகரில் யப்பானிய விமானம் ஒன்று 517 பேருடன் கடத்தப்பட்டது. விமான ஓட்டி கொல்லப்பட்டார்.
1999 – சந்திரா எக்ஸ்-கதிர் அவதான நிலையம் என்ற செய்மதி ஏவப்பட்டது.
1999 – மாஞ்சோலை தொழிலாளர்கள் படுகொலை: ஊதிய உயர்வு கேட்டு தமிழ்நாடு, திருநெல்வேலியில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய பேரணியின் போது காவல்துறை நடத்திய தடியடியில் பதினேழு பேர் உயிரிழந்தனர்.
2005 – எகிப்தில் இடம்பெற்ற மூன்று குண்டுவெடிப்புகளில் 88 பேர் கொல்லப்பட்டனர்.
2015 – கெப்லர்-452பி என்ற புறக்கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக நாசா அறிவித்தது.
பிறப்புகள்
1656 – குரு அர் கிருசன், சீக்கிய குரு (இ. 1664)
1856 – பால கங்காதர திலகர், இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1920)
1890 – பெரி. சுந்தரம், இலங்கை மலையகத் தமிழ் அரசியல்வாதி, தொழிற்சங்கத் தலைவர் (இ. 1957)
1892 – முதலாம் ஹைலி செலாசி, எத்தியோப்பியப் பேரரசர் (இ. 1975)
1898 – தாராசங்கர் பந்தோபாத்தியாய், வங்காள எழுத்தாளர் (இ. 1971)
1906 – சந்திரசேகர ஆசாத், இந்திய செயற்பாட்டாளர் (இ. 1931)
1928 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர்
1934 – நிர்மலா ஜோஷி, இந்தியக் கத்தோலிக்க அருட்சகோதரி (இ. 2015)
1936 – அந்தோணி கென்னடி, அமெரிக்க வழக்கறிஞர்
1947 – எல். சுப்பிரமணியம், தமிழக வயலின் கலைஞர்
1951 – அஜித் ஜெயின், இந்தியத் தொழிலதிபர்
1953 – கிரகாம் கூச், ஆங்கிலேயத் துடுப்பாளர்
1953 – நஜீப் துன் ரசாக், மலேசியாவின் 6வது பிரதமர்
1957 – தியோ வான் கோ, டச்சு நடிகர், இயக்குநர் (இ. 2004)
1967 – பிலிப் சீமோர் ஹாப்மன், அமெரிக்க நடிகர் (இ. 2014)
1973 – ஹிமேஷ் ரேஷாமியா, இந்தியப் பாடகர், நடிகர்
1975 – சூர்யா, தமிழக நடிகர்
1976 – பவதாரிணி, தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர், பாடகி
1976 – ஜூடிட் போல்கர், அங்கேரிய சதுரங்க வீரர்
1982 – பவுல் வெஸ்லி, அமெரிக்க நடிகர்
1989 – டேனியல் ராட்க்ளிஃப், ஆங்கிலேய நடிகர்
சிறப்பு நாள்
குழந்தைகள் நாள் (இந்தோனேசியா)

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading