ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்

ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்!

டிராய் தலைவர்
ஆர்.எஸ்.ஷர்மா தனது ஆதார் எண்ணை பொதுவெளியில் வெளியிட்டு சவால் விடுத்ததைத் தொடர்ந்து அவரது தனிப்பட்ட தகவல்கள் இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்பட்டன.
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) தலைவர் ஆர்.எஸ். ஷர்மா. இவர் தனது ஆதார் எண்ணை ட்விட்டரில் பதிவிட்டு ஆதார் எண் மிகவும் பாதுகாப்பானது என்றும் ஏதாவது தீங்கு செய்ய முடியுமா என்றும் சவால் விட்டார்.
அவர் பதிவிட்ட சில மணி நேரத்திலேயே பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் அல்டர்சன் என்னும் ஹேக்கர், ஷர்மாவின் ஆதார் எண்ணுடன் தொடர்புடைய செல்போன் எண், அந்த எண்ணின் வாட்ஸ் ஆப் முகப்புப் புகைப்படம், பான் எண், வீட்டு முகவரி, பிறந்த தேதி போன்ற தகவல்களைப் பதிவிட்டார்.
ஆதாரை பொதுவெளியில் பகிர்ந்தால் ஆபத்து என்றும் அல்டர்சன் எச்சரித்துள்ளார். அவருக்கு ஆர்.எஸ். ஷர்மா பதில் ஏதும் தெரிவிக்கவில்லை. இதனால், சமூக வலைத்தளங்களில் ஆதார் எண்ணின் பாதுகாப்பு குறித்தான சர்ச்சைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

Share this

1 Response to "ஆதாருக்கு ‘செக்’ வைத்த பிரான்ஸ் ஹேக்கர்"

  1. அரசாங்கம் வங்கி கணக்குடன் ஆதாரை இணைத்தது தவறு, நாளைக்கு வங்கியே பணத்தை எடுத்துவிட்டு தெரியாது என்றாலும் நம்புவதற்கில்லை.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...