இந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அமெரிக்கா

அமெரிக்காவின் அதிநவீன
தொழில்நுட்ப தயாரிப்புகளை எளிதில் கொள்முதல் செய்யும் சிறப்பு அந்தஸ்து இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
கடந்த 2016 ம் ஆண்டில் அமெரிக்க பாதுகாப்பு துறையின் முக்கிய கூட்டாளி என்ற அங்கீகாரத்தை இந்தியா பெற்றது. இதன் தொடர்ச்சியாக எஸ்.டி.ஏ-1 எனப்படும் உத்தியியல் சார்ந்த வர்த்தக அங்கீகாரம் பெற்ற நாடு என்ற அந்தஸ்தை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்றதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பு ஒப்புதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பானது, அமெரிக்காவின் மேம்பட்ட மற்றும் முக்கியமான நவீன தொழில்நுட்ப தயாரிப்புகளை அந்நாட்டிடம் இருந்து எளிதில் கொள்முதல் செய்ய வழிவகை செய்கிறது. இந்த அறிவிப்பானது இந்திய பாதுகாப்புத்துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். எஸ்.டி.ஏ-1 அங்கீகாரம் பெற்ற நாடுகள் பட்டியலில் உள்ள ஒரே தெற்காசிய நாடு இந்தியா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this

0 Comment to "இந்தியாவுக்கு STA-1 நாடு என்ற அந்தஸ்தை வழங்கியது அமெரிக்கா"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...