நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்!நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்!
குரூப் 4 தேர்வில் ஓஎம்ஆர் சீட் தொடர்பாக எந்த பிரச்சனையும்
ஏற்படவில்லை என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள்நேற்று (ஜூலை 30) வெளியிடப்பட்டது.
குரூப் 4 தேர்வு முடிவுகள் குறித்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் ஆகியோர்இன்று(ஜூலை 31) செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய முறைகளின்படி குரூப் 4 தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வை 17 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதியுள்ளனர் என தெரிவித்தனர்.
நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். ஒருங்கிணைந்த தேர்வால் அரசுக்கு 12 கோடி ரூபாய் செலவு குறைக்கப்பட்டுள்ளது.இந்த தேர்வில் தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம். சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இதையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும். மேலும், குரூப் 2 தேர்வுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என தெரிவித்துள்ளனர்.
2016 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தப்பட்ட குரூப்-1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலர் முறைகேடாக தேர்வு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. தேர்வு முறைகேடுகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பணியாளர்களைக் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் தேர்வர்கள் பங்கேற்றால் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது. அதனால், தேர்வர்கள் 50 ஆயிரம் முதல் 60 ஆயிரத்துக்குள் இருந்தால் மட்டுமே ஆன்லைனில் தேர்வு நடத்த முடியும் என தெரிவித்துள்ளனர்.

Share this

0 Comment to "நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான்!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...