குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்

குரூப் 4 தேர்வு முடிவுகள் நேற்று வெளியான
நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்பது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். சென்னையில் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுமன் ஆகியோர் கூறியதாவது, கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட குரூப் 4 பிரிவில் காலியாக இருந்த 9,351 இடங்களுக்கு நடந்த தேர்வின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்(டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் (www.tnpsc.gov.in)தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்தத் தேர்வினை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதினர். முதல்முறையாக, குரூப் 4 பிரிவுடன் கிராம நிர்வாக அலுவலர் தேர்வும் இணைத்தே நடத்தப்பட்டது. இதன் மூலம் டிஎன்பிஎஸ்சிக்கு ரூ.11 முதல் ரூ.12 கோடி மிச்சமானது. நாட்டில் நடைபெற்ற மிகப்பெரிய தேர்வு இதுதான். பிப்ரவரி மாதம் நடந்த குரூப் 4 தேர்வை எழுதிய 17 லட்சம் பேரில் சுமார் 14 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை விட 3 மடங்கு அதிகமான அதாவது 30 ஆயிரம் பேரை கலந்தாய்வுக்கு அழைப்போம். தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களுக்கு தகவல் அனுப்பப்படும், அவர்கள் தங்களது சான்றிதழ்களை இ-சேவை மையத்தில் பதிவேற்றம் செய்வதன் மூலம், அவர்கள் சென்னை வருவது தவிர்க்கப்படும். சான்றிதழ் பதிவேற்றம் ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும். 30ம் தேதி வரை இ-சேவை மையங்களில் செய்யலாம். அது முடிந்ததும் சான்றிதழ் சரிபார்ப்பு தொடங்கும். நாங்களே அதனை பதிவிறக்கம் செய்து சரிபார்ப்போம். அது முடிந்த பிறகு அக்டோபர் மாதம் கடைசி வாரத்தில் கலந்தாய்வு தொடங்கும் என்று தெரிவித்தனர்.
மேலும் குரூப்-2 தேர்வு அறிவிப்பு ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்தார்.

Share this

0 Comment to "குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கலந்தாய்வு எப்போது? டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் விளக்கம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...