ஆசிய நாடுகளுக்கு செல்லும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

ஆசிய நாடுகளுக்கு செல்லும்
மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை கால சலுகை வழங்க ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த திட்டத்தை மத்திய தனிநபர் பயிற்சித்துறை அமைச்சகம் தயாரித்துள்ளது. இதற்கான அறிக்கை, உள்துறை, சுற்றுலா, விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கருத்து கேட்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவாக பதில் அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளோம்.
கஜகஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிரிகிஸ்தான், தஜிகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய ஆசிய நாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை அதிகபடுத்தும் வகையில், இந்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
நன்றி தினமலர்

Share this